பெண்களின் உள்ளாடை குறித்த சந்தேகமும்., அதற்கான தீர்வுகளும்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெண்கள் பல துறைகளில் தங்களின் சாதனைகளை பதிவு செய்து வந்தாலும்., சில விஷயங்களை பொறுத்த வரையில் இருக்கும் சந்தேகங்கள் இன்றளவும் தீரவில்லை. அந்த வகையில்., மார்பக கச்சை என்று அழைக்கப்படும் பிராவை அணிவது குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. அவர்களின் மார்பக அளவிற்கு ஏற்றோர்போல் இல்லாத உள்ளாடையை அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். 

உங்களின் உடலில் உள்ளாடையின் அழுத்தமானது தடமாக பதிந்து., அந்த இடத்தின் நிறமானது சிவப்பு நிறத்துடன் தோற்றம் அளிக்கும் பட்சத்தில் அணிந்திருக்கும் உள்ளடையானது இறுக்கமானது என்று அர்த்தம். 

அதே போன்று உள்ளாடையின் முதுகுப்புறத்தில் இருக்கும் ஸ்ட்ராவானது மேலும் கீழும் இறங்கி வந்தால் அது பெரிய அளவிலான மார்பக கச்சை என்று அர்த்தம். தவறான அளவுள்ள உள்ளாடையை அணியும் போது அல்லது இறுக்கமான உள்ளாடையை அணியும் போது மார்பகத்தின் கீழ் பகுதியில் கருப்பு நிறம் போன்று தோற்றமளிக்கும். 

அதிகளவு எடை கொண்ட அதாவது மார்பகத்தின் அளவானது அதிகமாக இருக்கும் பட்சத்தில் 36 அளவுள்ள உள்ளாடையை அணிய கூடாது. இந்த அளவுள்ள உள்ளாடையை அணிவதன் மூலமாக மார்பகத்தின் தளர்வை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும். 

எந்த விதமான காரணமும் இல்லாமல் திடீரென முதுகுவலி மற்றும் தோள்பட்டை வலியானது தென்பட்டால்., அணிந்திருக்கும் உள்ளாடையின் அளவானது சரியானதா? என்று சோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு சரியாக இல்லை என்ற பட்சத்தில் சரியான அளவுள்ள உள்ளாடையை தேர்வு செய்யுங்கள். 

கருப்பு நிறத்தில் இருக்கு ஆடைகளுக்கு வெள்ளை நிறத்திலான உள்ளாடைகளும்., வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆடைகளுக்கு கருப்பு நிறத்தில் இருக்கும் உள்ளாடையை அணிந்தால்., அணிந்திருக்கும் உள்ளடையானது வெளிப்படையாக தெரியும். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான உள்ளாடையை அணியும் போது உடல் நிறத்தை ஒத்துப்போக கூடிய உள்ளாடையை அணிவது நல்லது. 

இரவு நேரத்தில் உள்ளாடையை அணிவது உங்களின் எண்ணத்தை பொறுத்தது. அதிகளவு மார்பகத்தின் அளவு கொண்ட பெண்கள் இயற்கையாக கனமான மார்பகத்தை கொண்டதன் காரணமாக மார்பகம் தளர்ந்து இருக்கும். இவர்கள் உள்ளாடை இல்லமல் உறங்கினால் மேலும் மார்பகம் தளர்வதற்கு வாய்ப்புள்ளது. அதிகளவு மார்பகத்தின் அளவுள்ள பெண்கள் உள்ளாடையுடன் உறங்குவது நல்லது. 

பெரும்பாலான பெண்கள் இன்றுள்ள நிலைமையில் நாள் முழுவதும் உள்ளாடை அணிந்து கொண்டு இருக்கின்றனர். இரவில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் உறங்கலாம் என்ற எண்ணமும் சில பேனலுக்கு இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் உள்ளாடை இல்லாமலேயே உறங்கலாம். மேலும்., சிறியளவிலான மார்பகத்தை கொண்ட பெண்கள் இரவில் உள்ளாடை அணிந்து உறங்க வேண்டும் என்ற பிரச்சனை கிடையாது. மேலும்., குழந்தைகளை பெற்றடுத்த பெண்கள் சரியான உள்ளாடையை அணிந்து மார்பகத்தை பாதுகாக்க வேண்டும். 

English Summary

Suspicions about women's wear bra and solutions


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal