சுண்டைக்காய் வத்தலை இனி வீட்டிலேயே.. சூப்பரா செஞ்சிடலாம்.. ஈசியா இப்படி செஞ்சு பாருங்க.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

சுண்டைக்காய் - 3/4 கிலோ
மோர் - 200 மிலி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் சுண்டைக்காயை காம்பு நீக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு நன்றாக கழுவி ஒரு பருத்தி துணியில் அதிகப்படியான தண்ணீரை துடைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன்பின் சுண்டக்காயை கத்தியை வைத்து ஒரு கீறி விட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பின் வெயிலில் ஒரு நாள்‌ முழுக்க காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெய்யிலில் காயவைத்த சுண்டைக்காயை இரவில் மோரில் போட்டு வைத்து பகலில்  சுண்டைக்காயை மட்டும் எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும். இதேப் போல் இரண்டு நாட்கள் இரவில் மோரில் போட்டு வைத்து பகலில் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் இரண்டு நாட்கள் பகலில் சுண்டைக்காயை வெயிலில் மட்டும் காயவைத்து எடுத்தால் சுண்டைக்காய் வத்தல் ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sun dried sundaikaai vaththal receipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->