கோடைக்காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


கோடைக்காலத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்? வீட்டில் இருந்தபடி என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்.

இரண்டு முறை குளித்தல் :

கோடைக்காலங்களில் முடிந்தவரை குளிர்ந்த நீரில் குளியுங்கள். காலை மற்றும் இரவில் உறங்குவதற்கு முன்பு இரண்டு வேளை குளிப்பதன் மூலமாக உடல் உஷ்ணம் அனைத்தும் குறைந்து நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும். அதேபோல் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் அழுக்குகள் போன்ற அனைத்தையும் குளிப்பதன் மூலம் அகற்ற முடியும்.

நீர் அருந்துதல் :

வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, இச்சமயத்தில் அதிகமான நீராகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கோடைக்காலங்களில் நாம் குறைந்தது ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இல்லையெனில் நீர்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

சன் ஸ்கிரீன் :

கோடைக்காலத்தில் வெளியே செல்வதாக இருந்தால் சன் ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். உங்கள் முகம், கைகள், கால்கள் என சூரிய ஒளி படும் அனைத்து இடங்களிலும் சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

மாய்ச்சுரைசர் :

கோடைக்காலத்தில் உருவாகும் வெயில் உங்கள் உடலை வெப்பமடைய செய்யும். சருமத்தின் தன்மையை மாற்றியமைத்து உடலில் எண்ணெய் பசையை அதிகரிக்கும். இதனால் கோடைக்காலங்களில் மாய்ச்சுரைசர் ஜெல்களை பயன்படுத்த வேண்டும். ஜெல்லானது உங்கள் சருமத்தை உடனடியாக குளிர்ச்சியடைய செய்து ஈரப்பதத்தை அளிக்கும்.

ஸ்க்ரப் :

கோடைக்காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது நாம் ஸ்க்ரப் செய்ய வேண்டும். வெயிலின் தாக்கத்தினால் நம் சருமத்தில் பாதிப்பு அதிகரித்து, இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அதிகமாக உருவாக்கும். இதை தடுப்பதற்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதன் மூலமாக சருமத்தில் இறந்த அனைத்து செல்களையும் அகற்றி, அழுக்குகளையும் விலக்கும். இதைத்தவிர்த்து நீங்கள் இழந்த நிறத்தையும் மீட்டுத்தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summer special 23


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->