இது கோடைக்காலம் அணிய வேண்டிய ஆடைகள்.. தவிர்க்க வேண்டிய ஆடைகள்.!! - Seithipunal
Seithipunal


அணிய வேண்டிய ஆடைகள் :

கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை, பருத்தி ஆடைகளே ஆகும். நாம் அணியும் உடைகள் இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது. பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் அணியலாம். தளர்வான, மென்மையான நிறங்களை கொண்ட ஆடைகள் அணியலாம். வெள்ளை நிற ஆடைகள் அதிகம் பலனளிக்கும்.

கோடைக்காலத்தில் அனைவருக்கும் இதமான ஆடையாக பருத்தி விளங்குகிறது. இதில் பலவகையான இந்திய காட்டன் உடைகள் இருந்தாலும் கோடைக்காலத்தில் பயன்படுத்தவும், அணியவும் சிறந்த துணி வகையாக காதி விளங்குகிறது.

முடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடையை எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த கோடை வெயிலின் தட்ப வெப்பநிலைக்கு தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்.

தவிர்க்க வேண்டிய ஆடைகள் :

கோடைக்காலம் ஆரம்பித்தவுடன் ஆடை அணிவதில் பெரிய மாற்றம் செய்திட வேண்டும்.

நைலான் மற்றும் பாலிஸ்டர் ஆடைகள் அணியவே கூடாது.

இறுக்கமாக ஆடைகள் அணியக்கூடாது. தோல் ஆடைகள், சாட்பீன் போன்ற உறுத்தும் ஆடைகளை அணிதல் கூடாது.

சூரிய வெப்பத்தால் ஏற்படும் வியர்வை உடல் மடிப்பு, கை, கால் இடுக்குகளில் ஆடையுடன் படிந்துவிட்டால் கொப்புளங்கள் ஏற்பட வழிவகுக்கும். மேலும், பாலிஸ்டர் ஆடைகள் அணிந்தால், அவை வெயிலின் தாக்கத்தை அதிகப்படுத்தி உடலை பாதிக்கும்.

வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளை தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகள் அணியலாம்.

உடலை ஒட்டிய ஜீன்ஸ், லெக்கீன்ஸ் மற்றும் இறுக்கமான பேண்ட்களை கோடைக்காலத்தில் அணிவதை தவிர்ப்பது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summer special 22


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->