நோய் நொடிகளை விரட்டும் சுக்குவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்.! - Seithipunal
Seithipunal


பல்வேறு வகையில் நன்மை தரும் சுக்கு:

மாசினால் மக்களுக்கு பிரச்சனை வருவதுண்டு. இதற்காக மருத்துவமனைக்கு ஓடுவதை விட வீட்டிலே எளிதான முறையில் நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். நம்மை பாதுகாக்கும் ஒரு மருந்து தான் "சுக்கு".

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது இந்த சுக்கு. இதனை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வப்போது பயன்படுத்தலாம்.

சுக்கின் மகத்துவங்கள் :

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்ப நிலை வாதம் குணமாகும்.

சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்த வழியே போய்விடும்.

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ''சுக்கு நீர்'' காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sukku For glowing all Nature


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->