பெண்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்ள காரணம் என்ன? அதற்கான தீர்வு.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நிலையில் சத்தான உணவுகளை சாப்பிடவில்லை என்றால் மனதளவிலும்., உடலளவிலும்., உணர்வுகள் ரீதியாகவும் பல பிரச்சனை பெண்களுக்கு ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. இதனை சரி செய்வதற்கு சில வாழ்வியல் பழக்க வழக்கங்கள் குறித்து இனி காண்போம். 

அன்றாட பணிகளை செய்து முடித்துவிட்டு தினமும் சுமார் ஏழு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்குவதும்., மறுநாள் காலையில் ஆறு மணிக்கு எழுவதும் உடலுக்கு நல்லது.

கேடுகளை விளைவிக்கும் எண்ணெய்யில் பொறித்த மீன் உணவுகளை உண்ணுவதை தவிர்க்க வேண்டும்., நன்றாக வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. 

தினமும் நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளையும்., கீரைகள்., காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும். நாட்டு கோழி முட்டையை வாரத்திற்கு ஐந்து நாட்கள் சாப்பிட வேண்டும். 

முடிந்தளவு துளசி தண்ணீர் மற்றும் துளசி தேநீரை அருந்தினால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவானது குறையும்., ஹார்மோன்களின் பிரச்சனையும் சீராகும். 

தினமும் கட்டாயம் மூச்சு பயிற்சியை செய்ய வேண்டும்., இதன் மூலமாக ஹார்மோன்களின் இயக்கமானது சிறப்பாக இயங்கும். காலையில் சூரிய வெளிச்சத்தை நமது உடல் ஏற்கும் படி காலை ஆறு மணிக்கு எழுந்திருந்து., வெயில் படும்படி 20 நிமிடங்கள் நிற்க வேண்டும். 

தினமும் தயிர் மற்றும் மோர் சார்ந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிறானது நல்ல நலம் பெரும். இதன் மூலமாக இன்சுலின்., கிரேலின் மற்றும் லெப்டின் ஹார்மோன்களின் சுரப்பானது சீராக இயங்கும். முடிந்தளவு துரித உணவுகளை சாப்பிட வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solution for womens problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->