ஐம்பெருங் காப்பியங்களில் முதல் காப்பியம்... சீவக சிந்தாமணி.! - Seithipunal
Seithipunal


காப்பியம் என்பது பல கருத்துக்களை ஒருங்கிணைத்த வாழ்க்கைக்கு தேவையாக இருக்கக்கூடிய அறம், பொருள், இன்பம், வீடு முதலியவற்றை இலக்கிய நயத்துடன் எடுத்து உரைக்கும் வடிவங்களில் ஒன்றாகும். 

ஐம்பெரும் காப்பியங்களாக கூறப்பட்டுள்ள அனைத்து நூல்களின் பெயர்களும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பயன்படுகின்ற ஆபரணங்களின் தொகுப்பாகவே கூறப்பட்டிருக்கும்.

வாழ்வில் மாற்றம் என்பது மாறாத ஒன்றாகும். அந்த மாற்றம் யார் மூலமாக ஏற்படுகிறது என்பதை பொறுத்து ஒருவரின் வாழ்க்கையில் பல திருப்பங்களும், யாவரும் எதிர்பாராத திடீர் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

பல திருப்பங்கள் நன்மையில் முடிந்தாலும், சில திருப்பங்கள் பலருக்கு எடுத்துரைக்கும் மாற்றமாகவோ, கதைகளாகவோ திரும்பி எதிர்காலத்தினை பார்க்கின்றது.

தலைவனின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்குவதில் தலைவியின் பங்கு என்பது முதன்மையாக இருக்கிறது. தலைவி இல்லையேல் தலைவனும் இல்லை. சுருங்கச் சொல்ல போனால், சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது போல தான்.

ஒவ்வொரு காப்பியங்களிலும் தலைவனுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தலைவியின் மூலமாகவே அனைத்து மாற்றங்களும், வாழ்வியல் இயக்கங்களும், இன்பத்தின் நுகர்வுகளும், மோட்சத்தின் வழித்தடங்களும் பிறக்கின்றன என்பதை மறைமுகமாக எக்காலத்திலும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அக்காலத்தில் அதாவது, சங்க காலத்தில் வாழ்ந்த சான்றோர் பெருமக்கள் மூலமாக எதிர்காலத்தில் வாழ்வோருக்கு எடுத்துரைக்கப்பட்ட உன்னதமான கருத்துக்கள் பல பொதிந்த சிறந்த நூல்களாகும்.

அதிகாரம் என்பது பொதுநலமாக இருக்கும் பொழுது அனைவரையும் காக்கும் பாதுகாவலனாக இருக்கும். அதே அதிகாரம் சுயநலமாக மாறும் பொழுது அனைவரையும் அழிக்கும் எமனின் பாசக்கயிறாகவும் மாறும். அளவற்ற இன்பம், அளவில்லாத இன்னல்களை உருவாக்கக் கூடியதாகும். எதிர்ப்பை வெல்லும் காலத்தை அறியும் வரை பொறுமை காத்தல் என்பது உன்னதம். அதைவிட தன் எண்ணம் ஈடேறும் வரை தனது செயலை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறப்பாகும்.

வாழ்வதும், வீழ்வதும் ஒரு முறையேயானாலும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீட்டில் மாற்றம் ஏற்படும் பொழுது வீழ்வதும், வாழ்வதும் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறுகின்றன.

தவியில் இருக்கின்றவன் தன்னுடைய நிலையிலிருந்து தவறும் பட்சத்தில் அவனுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிலையில் தோன்றக்கூடிய மாற்றங்களையும், அவனை சார்ந்து இருக்கக்கூடிய மக்களின் நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும், அவன் வம்சா வழியில் ஏற்படப்போகும் மாற்றத்தினையும் சீவக சிந்தாமணி என்னும் நூல் வெளிப்படுத்தும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seevaga sindhamani special in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->