விமானத்தில் இருக்கும் ரகசிய அறை... வியக்கவைக்கும் காரணம்.!  - Seithipunal
Seithipunal


விமான பயணம் என்றாலே கட்டுப்பாடுகள் பல்வேறு விதிக்கப்பட்டு இருக்கும். அதுபோல விமானத்தில் பல்வேறு ரகசியங்களும் இருக்கும். அது குறித்து சாதாரண மனிதர்களுக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல ஒன்றுதான் தற்போது தெரிந்துகொள்ள வேண்டிய ரகசிய அறை.

நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்களில், இந்த ரகசிய அறையை பார்க்கலாம். நீண்ட தூர பயணத்தின் பொழுது பயணிகளை பொறுத்தவரை புத்தகங்கள் படிப்பது, டிவி பார்ப்பது என தங்களுடைய நேரத்தை செலவழிப்பார்கள். அந்த நீண்ட தூர பயணத்தின் போது பயணிகளுக்கு மட்டுமல்லாமல் விமானிகள் மற்றும் விமான பணி பெண்களுக்கும் ஓய்வு என்பது தேவைதானே.

அதற்காகத்தான் இந்த ரகசிய அறைகள் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பிட்ட பணிப்பெண்கள் பணியில் இருக்கும் பொழுது மற்றவர்கள் அந்த ரகசிய அறையில் ஓய்வு எடுத்துக் கொள்ள இயலும். இந்த ரகசிய அறையானது, பிசினஸ் வகுப்பிற்கு மேலே இருக்கும் காஃபினிட்டிற்கு பின்னால் அமைந்து இருக்கின்றது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்களில் நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்களில் ஒரே நேரத்தில் எட்டு பேர் வரை ஓய்வு எடுக்கும் அளவிற்கு வசதியான இடம் இருக்கும் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

secret room in flight


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->