Freedom Fighter : இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த... இரும்பு மனிதர் யார் இவர்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இரும்பு மனிதர்:

இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர். இந்திய விடுதலை போராட்டத்தின் போது, இந்தியாவை தலைமை தாங்கி போராட்டங்கள் நடத்திய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவின் இரும்பு மனிதர் இவரை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

பிறப்பு :

சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும்.     இவரது தந்தை ஜாவேரிபாய் படேல், தாய் லாட்பா. இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் படேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும், தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார்.

கல்வி :

வல்லபாய் படேல் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தபோது அவருடைய வயது 22. தனது 25வது வயதில் 'டிஸ்ட்ரிக்ட் பிளீடர்" படிப்பை முடித்து கோத்ராவில் வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார். பின்னர் சிறிது சிறிதாக பணம் சேர்த்து சட்டம் பயில லண்டன் புறப்பட்டார். அங்கு அயராது உழைத்து பட்டப்படிப்பில் முதல் மாணவனாக தேறினார். மேலும், பாரீஸ்டர் பட்டமும் பெற்றார். நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார்.

திருமண வாழ்க்கை :

வல்லபாய் படேல் தனது 18வது வயதிலேயே ஜவேர்பா என்ற 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மணிபென் என்ற மகளும், தாக்யாபாய் என்ற மகனும் பிறந்தனர்.

விடுதலை போராட்டத்தில் வல்லபாய் படேலின் பங்கு :

குஜராத் அரசியலில் காந்தி பங்கெடுத்து செயலாற்றிய விதம் வல்லபாய் படேலை பெரிதும் ஈர்த்தது.

ஆங்கிலேய அரசிடம் வரிவிலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, வல்லபாய் படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. இதனால் ஆங்கில அரசு பணிந்தது. வரி ரத்தானது. இதுவே, வல்லபாய் படேலின் முதல் வெற்றி ஆகும்.

மேலும் வன்முறைக்கூடாது, படித்தவர்கள் பட்டங்களையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிகளையும், மாணவர்கள் பள்ளியையும் துறக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார். இதன் விளைவாக வல்லபாய் படேல் தனது வழக்கறிஞர் பணியை துறந்தார். குஜராத் முழுதும் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தை பற்றி மக்களிடம் எடுத்துரைத்தார்.

காந்தி சிறைக்கு சென்றதால் குஜராத்தில் இயக்கத்தை தலைமை தாங்கும் பொறுப்பு வல்லபாய் படேலுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் குஜராத்தை தாண்டி, வெளியிலும் வல்லபாய் படேலின் புகழ் பரவத் தொடங்கியது.

இந்திய தலைவர்களுடனும், முஸ்லீம் லீக் தலைவர்களுடனும் பேசி பிரிட்டிஷ் ஆட்சியை முடித்து வைத்தார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு சுதந்திர நாடுகள் தோன்றின.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

நாடு முழுவதும் துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. 565 ராஜ்ஜியங்கள் ஆண்டு கொண்டிருந்தன. சிதறுண்டாக கிடந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை பிரதமர் ஜவஹர்லால் நேரு வல்லபாய் படேலிடம் ஒப்படைத்தார். 

பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து 'இரும்பு மனிதர்" எனப் பெயர் பெற்றார்.

மறைவு :

சுமார் அரைநூற்றாண்டு காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்த வல்லபாய் படேல் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தனது 75வது வயதில் மாரடைப்பால் இவ்வுலகை வி;ட்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sarthar vallabai patel history freedom fighter episode 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->