எளிமையான முறையில் கெட்ட கொழுப்பை குறைக்க இதை செய்து சாப்பிடுங்கள்.!  - Seithipunal
Seithipunal


உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்ட உதவுகிறது சோயா பீன்ஸ். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கெட்ட கொழுப்பை கரைக்கும் சோயா பீன்ஸ் அடை:

தேவைப்படும் பொருட்கள்:

பச்சரிசி, இட்லி அரிசி - தலா 1 கப்
கடலைப்பருப்பு - அரை கப் 
துவரம்பருப்பு,  - அரை கப்
காய்ந்த சோயா பயறு - அரை கப் 
பாசிப்பருப்பு  - 3 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 7  
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன் 
மஞ்சள்தூள் -  கால் ஸ்பூன் 
தேங்காய்த் துருவல் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்யும் முறை:

அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளுடன் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

சத்தான சுவையான சோயா பீன்ஸ் அடை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe for reduces fat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->