காலைல செஞ்ச இட்லி மீந்து போச்சா ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இட்லி கபாப் செஞ்சுக்கலாம்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

இட்லி  - 4  
உருளைக்கிழங்கு  -  1  வேக வைத்தது 
வெங்காயம்  -  1/4
பச்சை மிளகாய்  -  1 
கறிவேப்பிலை -  5-6
கரம் மசாலா  - 1/4   டீ ஸ்பூன்  
மல்லித்தூள் - 1/4  டீ ஸ்பூன்   
மிளகாய் தூள் - 1/2  டீ ஸ்பூன்   
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவையானஅளவு 

செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக கொதித்ததும் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து  நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.  

வெங்காயம் நன்றாக வதங்கி பொன் நிறத்தில் மாறியதும்  அதனுடன்  பச்சை மிளகாய்  மற்றும் கருவேப்பிலை சேர்த்து  நன்றாக கிளறி விடவும். இவற்றுடன்  வேகவைத்து  மசிய வைத்த  உருளைக்கிழங்கை சேர்த்து  நன்றாக வதக்கிக் கொள்ளவும். 

இவற்றுடன்  கால் டீஸ்பூன்  கரம் மசாலா,கால் டீஸ்பூன் மல்லித்தூள்,அரை டீஸ்பூன்  மிளகாய் தூள்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் வேகவிட்டு ஸ்டவ்வை அணைத்து விடவும்.

வேறொரு பாத்திரத்தில் எடுத்து  அதில் இட்லியை நன்றாக உதிர்த்துவிட்டு, அவற்றுடன்  நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை  நன்றாக கலக்கவும்.  இவற்றுடன்  தேவையான அளவு மல்லி இலையும் சேர்த்துக் கொள்ளவும். 

நன்றாக கலந்த பின் அவற்றை ஒரு கபாப் குச்சியில் கூர்மையான பாகத்தில் பிடித்து வைத்துக் கொள்ளலாம் இல்லை என்றால் சிறுசிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். 

பின்னர் கடாயில்  தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவற்றில் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை அல்லது கபாபை குச்சியுடன் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். 

பொன்னிறமாகும் வரை  மிதமான சூட்டில் வைத்து  பொரித்தெடுத்தபின் அவற்றில் எஞ்சி இருக்கும் எண்ணையை வடிகட்டி எடுத்தால் நமக்கு சுவையான இட்லி கபாப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Receipe to make idly kebab or idly pops with left over idly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->