மழைக்காலத்தில் உடைகள் குறித்த விழிப்புணர்வு.!  - Seithipunal
Seithipunal


உடுத்தும் ஆடைகள் : 

மழைக்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளலாம். நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காயலாம். தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் வேண்டும்.

பருத்தி ஆடைகளை அணியக்கூடாது. ஏனெனில் மழை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது.

இரவு நேரங்களில் கம்பளியாலான போர்வையை பயன்படுத்தலாம்.

ஸ்வெட்டர், கையுறை, சாக்ஸ், தொப்பி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

ஆடைகள் மொத்தமானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குளிரை தாக்கக் கூடியதாக இருக்கும்.

குறிப்பு :

மழைக்காலம் முழுவதும் ஒரே பெட்ஷிட் போர்வையைப் பயன்படுத்தக்கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ஷிட் மற்றும் போர்வையைத் துவைத்து உலர்த்திப் பயன்படுத்த வேண்டும்.

ஆடையை நன்றாகத் துவைத்து பகல் வேளையில் வெயிலில் உலர்த்தினால் தான் கிருமிகள் அழியும் அதை பயன்படுத்தினால் நல்லது.

மழைக்காலத்தில் தினமும் இரண்டுமுறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வீட்டிலும் வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்கவிடக்கூடாது. வீட்டைச்சுற்றி அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain dress in season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->