தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியமா.? - Seithipunal
Seithipunal


கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தினமும் எண்ணெய் தேய்ப்பது மிகவும் நல்லது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

எண்ணெய் தேய்ப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றும், எண்ணெய் தேய்ப்பது கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனால் கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமே என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.

முடி உலர்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு கொடுத்து முடியை பலப்படுத்துகிறது எண்ணெய்.

ன்றைய பெண்கள் கடுகு, பீலு எண்ணெய் தேய்த்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுவாக எல்லோரும் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகும். இரண்டு எண்ணெய்களுமே தலைக்கு தேய்ப்பதற்கு சிறந்தவை என்பது நாம் பெருமைகொள்ளத்தக்க ஒன்று.

ல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கிறது.
முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.

குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை வாரம் ஒரு முறையும், குளித்த பிறகு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை அன்றாடமும் கடைபிடிக்கலாம்.

லை முழுக்க எண்ணெய் படும்படி மட்டும் தேய்த்தால் போதும்; நனையும் அளவுக்கு அதிகம் தேய்க்க தேவையில்லை.

ண்ணெய் ஒவ்வாமை உள்ளவர்களும் தலையில் இயற்கையாக அதிக எண்ணெய் உள்ளவர்களும், எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்கலாம்.

யற்கையாக கிடைக்கக்கூடிய நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினாலே போதும்.

செயற்கை ஹேர் ஆயில்களை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். விளம்பரத்தை பார்த்து வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

put oil for hair is important


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->