என்ன தான் ஆம்லெட் செய்தாலும், ஓட்டல் போல வரலையா.? இப்படி ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


முட்டையில் ஆம்லெட் போடும் போது, சேர்ந்து வராமல் உதிர்ந்தால் முட்டையை கலக்கும்போது அதனுடன் சிறிது கடலைமாவும் சேர்த்துக் கொண்டால், ஆம்லெட்டின் சுவையும், மணமும் கூடும்.

ஒரு டம்ளர் ரவையுடன், ஒரு டம்ளர் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கலந்து தோசை வார்த்தால் பேப்பர் ரோஸ்ட் போல் வருவதுடன், சுவையாகவும் இருக்கும்.

மட்டன் அல்லது சிக்கன் போன்று அசைவ உணவுகளை அரைக்க மிக்ஸி பயன்படுத்தப்பட்டால் அதில் அசைவ வாடை இருக்கும். அதனைப் போக்க மிக்ஸி ஜாரில் 2 பிரட் துண்டுகளை போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளையும் போட்டு அரைத்தால் அசைவ வாடை வராது.

குக்கரில் இட்லி சுடும்போது, தட்டின் குழிவான பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும் அந்தப் பகுதிகளில் எண்ணெய் தடவினால் இட்லி முழுமையாக வந்துவிடும்.

அசைவ சாப்பாடு சாப்பிட்ட பிறகு எலுமிச்சம் பழச்சாறு குடித்தால் சீக்கிரம் ஜீரணமாகும்.

பஜ்ஜி செய்து, விருந்துகளில் அலங்கரிக்க வெங்காயத்தை வட்டமாக நறுக்குவது வழக்கம். வெங்காயத்தின் தோலை உரிக்காமலேயே வட்டங்களாக வெட்டி விட்டுப் பிறகு உரித்தால் வெங்காயம் பிரியாமல் அப்படியே இருக்கும்.

முட்டை தயார் செய்த பாத்திரங்களை குளிர்ந்த தண்ணீரில் ஊறப்போட்டு உடனே கழுவ வேண்டும்.

பிரியாணி போன்ற மசாலா கலந்த உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன் மீது ஒரு பிரெட் துண்டினை வைத்தால் தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

omlet preparation like hotel in tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->