மன அழுத்தம் வந்தா அழுபவரா நீங்கள்.?! இது உங்களுக்கு தான்.!  - Seithipunal
Seithipunal


இரவு அழுபவர்களுக்கு உடல் எடை குறையும் என்று ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது. அழுவது மன ஆறுதல் தரும் என்பதுதான் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆய்வில் வினோதமாக உடல் எடைக் குறையும் தெரிவிக்கிறார்கள்.

இரவு 7 - 10 மணிக்குள் நாம் அழும்போது உடல் கார்டிசோல் என்னும் ஹார்மோனை வெளியிடுகிறது. இந்த கார்டிசோல் ஹார்மோனுக்கு உடல் கொழுப்பை கரைக்கும் தன்மை இருக்கிறது. அதேபோல் மன அழுத்தம் கண்ணீரைத் தூண்டும். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுமாம்.

உங்களுக்குக் கண்ணீர் அவ்வளவு எளிதில் வராது எனில் நீங்கள் கொஞ்சம் பாவம்தான். அதேபோல் ஆய்வின் படி உண்மையான கண்ணீருக்கு மட்டுமே இந்த பலன் கிடைக்கும்.

அதேபோல் கண்ணீரில் மூன்று வகை இருக்கிறது :

1. அடிப்படையான கண்ணீர் ( basal )

2. எரிச்சலினால் வரும் கண்ணீர்

3.  உணர்ச்சிவசப்படும்போது வரும் கண்ணீர் ( psychic )

முதல்வகை கண்ணீர் வெறும் ஈரப்பதத்தை மட்டும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இரண்டாவது வகை கண்ணில் புகை , தூசு காரணமாக வெளியாகும் கண்ணீர். 

மூன்றாவது கண்ணீர் என்பதுதான் ஆழ் மனதிலிருந்து மன வருத்தத்தால் அழுவதாகும்.

இந்த மூன்றாவது வகை கண்ணீர் வந்தால் மட்டும்தான் கார்டிசோல் சுரக்கும். உடல் எடைக் குறையும் என அந்த ஆய்வு தெளிவாக விளக்குகிறது.

நாம் ஓய்வு நிலையில் இருக்கும்போது இதய தசைகள் ஒரு மணி நேரத்திற்கு 8 1/2 கலோரிகள் குறைகின்றன.

அதே மனதளவில் பாதிக்கப்பட்டு அழும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இந்த துடிப்பானது இதய தசைகளில் உள்ள கொழுப்புகளை வெகுவாகக் கரைக்கிறது.

அதுவே நடிப்புக்காக அழும் கண்ணீரால் மிகவும் குறைந்த அளவில்தான் கொழுப்புகள் கரையுமாம்.

எனவே அடுத்த முறை அழும்போது நன்கு தேம்பித் தேம்பி அழுங்கள். உடல் கட்டுக்கோப்புடன் ஆரோக்கியமாக இருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

night time criers should know this


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->