பாலைக் காய்ச்சும் போது அது ஏன் பொங்கி வருகிறது? - Seithipunal
Seithipunal


பால் என்பது தண்ணீர், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை. பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன. 

தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100˚C. ஆனால், பாலில் உள்ள கொழுப்பு 50˚Cel உருக ஆரம்பித்து விடும். பாலை காய்ச்சும் போது 50˚C நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது. 

எந்த ஒரு திரவத்தை கொதிக்க வைத்தாலும் அந்த திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். 

மேற்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப் படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப்படலத்தோடு மேலெழும்பி பொங்கி வழிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Milk Boiling Bubbles reaction


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->