பெண்களே.. தீராத கவலைகளை தீர்க்க, இந்த செடியிடம் மனம் விட்டு பேசுங்கள்.! இராமயணம் உணர்த்தும் விஷயம்.!  - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு யாரிடமும் கூற முடியாத அளவிற்கு பல்வேறு நேரங்களில் சோகம் வாட்டும். அப்படி மனபாரம் தாங்க முடியாத நேரத்தில் யாரிடம் கஷ்டத்தை சொல்லி அழுவது என்ற கேள்வி இருக்கிற சோகத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தும். 

அப்படி இருக்கும் பொழுது உங்கள் வீட்டில் மருதாணி செடி அருகில் அமர்ந்து, உங்கள் கஷ்டங்களை கூற வேண்டும். ஆனால் செடியிடம் அழுது புலம்புவது கூடாது. இப்படி எல்லாம் கஷ்டம் இருக்கிறது. இந்த கஷ்டமெல்லாம் விரைவில் தீர்ந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று மருதாணி செடியிடம் வாய் விட்டு மனதார பேச வேண்டும். 

நீங்கள் மனதார பேசினாலும் சரி அல்லது மனதிற்குள்ளேயே பேசினாலும் சரி அது உங்களுடைய விருப்பம். ஆனால், மருதாணி செடியிடம் நீங்கள் இப்படி பேசுவது உங்கள் கஷ்டத்தை தீர்க்கக்கூடிய விஷயமாக அமையும். உங்களுக்கு மன அமைதியை மருதாணி செடி தரும். 

சீதை ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு அசோகவனத்தில் தங்கி இருந்த பொழுது அங்கிருந்த மருதாணி செடியிடம் சீதை தினமும் தனது கஷ்டங்களை கூறி அழுவாராம். அந்த மருதாணி செடி கஷ்டங்களை எல்லாம் பொறுமையாக கேட்டதாக புராணக் கதை கூறுகிறது.

தனது சோகத்தை பொறுமையாக கேட்ட மருதாணி செடி குறித்து சீதை ராமரிடம் கூறி மருதாணி செடிக்கு விசேஷ வரம் வாங்கிய கொடுத்ததாகவும், இதனால், மருதாணி இலைகளை அரைத்து கையில் வைத்துக் கொண்டால் லட்சுமி கடாட்சம் சந்தோஷமும் கிடைக்கும் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. 

எனவே, ஒவ்வொருவர் வீட்டிலும் மருதாணி செடியை கட்டாயம் வளர்ப்பது நல்லது அந்த செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றி ஆசையுடன் பேசிக்கொண்டு, அதனுடன் உரையாடிக்கொண்டிருந்தால் மனதில் நிம்மதியும் வீட்டில் லட்சுமி கடாட்சமும் ஏற்படும். எனவே, இதனை நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meditation in marudhani Leaf and ramayanam History


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->