இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்.! - Seithipunal
Seithipunal


1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

காற்றை கண்டு பயப்படாதீர்கள்

குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்

சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்

இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

live your life like this


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->