வளரும் குழந்தைகள் விரும்பி உண்ணும் சிற்றுண்டி... ஆரோக்கியம் நிறைந்த கம்பு லட்டு.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

வெல்லம் - 2 கப்

பாதாம் - 10

கம்பு மாவு - 2 கப்

ஏலக்காய் - 10

முந்திரி - 10

பிஸ்தா - 10

திராட்சை - 10

தண்ணீர்- தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் இந்த மாவை சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
அது ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் எடுத்து லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான, சுவையான கம்பு லட்டு தயார்.

கம்பு லட்டு பயன்கள்:

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும், வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை. கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கும் சத்தான வைட்டமின் ஏ-வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

கம்பங்கூழ், கம்பு புட்டு, கம்பு ரொட்டி, கம்பு தோசை, கம்பு அடை என பலவிதமான ரெசிபிகள் வீட்டில் பெரியவர்கள் செய்வார்கள். அதேபோல் கம்பை வைத்து லட்டு செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kambu laddu preparation for kids


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->