மனதில் நிற்கும் எழுத்துலக சிற்பி.. திறனாய்வுச் செம்மல் என்றால்.. நினைவுக்கு வருபவர் இவரே..! - Seithipunal
Seithipunal


ஒரு தமிழ் எழுத்தாளர்...

தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்...

தக்க தகவுடைய சான்றுகளுடன் ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர்...

நல்ல விமர்சகர்... 

சிறந்த மொழி பெயர்ப்பாளர்...

திறனாய்வுச் செம்மல் என்ற விருதை பெற்றவர்...

அவர்தான் அறிஞர் திரு.க.பூரணச்சந்திரன்.! 

ஆரம்பகால வாழ்க்கை:

அறிஞர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 

வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். 

இவருக்கு ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றில் அடிப்படைத் தேர்ச்சி உண்டு. இவையாவும் அவருடைய ஆய்வுகளுக்குப் பெரும் உதவியாக அமைந்தன. 

இலக்கிய வாழ்க்கை:

மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். அவற்றில் சில கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.

பல இலக்கியம் சார்ந்த சிற்றிதழ்களின் வளர்ச்சியிலும், தமிழகத்தில் புதிய நாடகக்கலை குறித்த கருத்தரங்கு, பட்டறை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதிலும் முன்னின்று செயலாற்றினார்.

முற்போக்கு திரைப்படங்களையும், விமர்சனத்தையும் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த முயற்சி எடுத்தார். 

பணி ஓய்விற்கு பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற திட்டப்பணியினையும் திறம்பட செய்து முடித்தார். 

இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. காலச்சுவடு, நிகழ், தமிழ் நேயம் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 

பல கருத்தரங்குகளை நடத்தி, நூல்களையும் தொகுத்துள்ளார். திருச்சியில் (1989) முதன்முதலில் பாதல்சர்க்காரின் பெயரால் நாடகப்பட்டறை நடத்தினார். 

கல்லூரி வகுப்பறைகளாக இருப்பினும், கருத்தரங்குகளாக இருப்பினும் இவரது சொற்பொழிவுகள் தேர்ந்த ஞானத்தின் வெளிப்பாடாக இருக்கும். 

தக்க தகவுடைய சான்றுகளுடன் ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர். நல்ல விமர்சகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர்.

2015ஆம் ஆண்டு இவர் பெயரில் திறனாய்வு அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் மாணவர்களுக்கு திறனாய்வு மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். 

இதை தவிர இவர் பெயரில் ஒரு இணையதளத்தை நடத்தி வருகிறார். இதில் மாணவர்கள் மற்றும் சமுதாய நலன்களை கருத்தில் கொண்டு பல்துறை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

விருதுகள் :

ஆனந்த விகடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2011)

கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2015)

ஆனந்தவிகடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2016)

சாகித்ய அகாடமி (2016)

சிறந்த பேராசிரியர்-சாதனையாளர் விருது (2017, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி)

திறனாய்வுச் செம்மல் விருது (2018) (தி.சு.நடராசன் அறக்கட்டளை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)1


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ka pooranachandran history


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->