மொறு மொறுப்பான தட்டை ரெஸிபி.! ஈசியா செய்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப் 
உளுந்த மாவு -1 டீஸ்பூன் 
கடலை மாவு -1 டீஸ்பூன் 
மிளகாய் பவுடர் -1 டீஸ்பூன் 
பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன் 
பெருங்காயம் - 1/4  டீஸ்பூன் 
வெண்ணை - 1  1/2 டீஸ்பூன் 
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை -1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு சேர்த்து  பொறுமையாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

அந்த மாவு ஆறினப்பின் அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், பொட்டுக்கடலை, உப்பு, இளகிய வெண்ணையை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். அடிக்கடி தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

மாவு பிடிக்கும் பக்குவம் இருக்க வேண்டும் பிடிக்கும் போது உதிர்த்துபோனால் இன்னும் கொஞ்சம் வெண்ணை சேர்த்து கொள்ளலாம்.

அதன் பின் சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலை அல்லது பால் கவரில் எண்ணெய் தடவி இந்த உருண்டையை வைத்து ஷீட்டை மடக்கி சின்ன வட்ட பாத்திரம் எடுத்து அந்த ஷீட்டின் மேல் வைத்து மெதுவாக அழுத்தினால் வட்டமாக தட்டை வடிவில் வந்துவிடும். இப்படி எல்லா உருண்டைகளையும் தட்டையாக்கி பத்து நிமிடம் காய வைத்து கொள்ளவும்.

அதன்பின் எண்ணையில் மிதமான சூட்டில் போட்டு நுரை அடங்கியதும் எடுத்தால் இன்ஸ்டன்ட் மொறு மொறு தட்டை ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Instant crispy thattai snack receipe


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->