சில நேரங்களில் வெயில் அடிக்கும்போதே, மழை பெய்வது ஏன்?! - Seithipunal
Seithipunal


மழை வருவதை முன்னரே அறிவது எப்படி?

பொதுவாக கிராமங்களில் பேச்சு வழக்கில் 'மழை வருவது மகேசனுக்கு (கடவுளுக்கு) மட்டுமே தெரியும்" என்று கூறுவார்கள். ஆனால் மழை வருவது என்பது வளிமண்டலத்தில் தோன்றும் மாற்றத்தினால் ஏற்படுகிறது. 

இன்றும் கூட பறவைகள் மற்றும் விலங்கினங்களின் மூலம் நாம் மழை வருவதை முன்னரே அறியலாம். ஏனெனில் அவைகள் மட்டும் தான் இயற்கையோடு இன்று வரை இணைந்தே பயணிக்கின்றன.

மழை வருவதை முன்னரே அறிவது எப்படி?

மழை வருவதை முன்கூட்டியே உணர்ந்து, புற்று மண் கரைந்து விடும் என்பதற்காக பொதுவாக கரையான்கள் புற்றிலிருந்து வெளியே வந்து பறக்கும்.

இரவில் மட்டுமே சுறுசுறுப்புடன் இயங்கும் வெளவால்கள், பகல் நேரங்களில் அதிக உயரத்தில் வெகு நேரம் பறந்துக் கொண்டிருந்தால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று பொருள்.

நீரில் வசிக்கும் பறவைகள் பொதுவாக கரையோரங்களில் இருக்கும் புதர்களில் அல்லது மண்ணில் ஆழமாக குழித்தோண்டி முட்டையிடும் வழக்கத்தை கொண்டது. 

ஆனால் மழை, வெள்ளம் போன்றவைகள் தோன்றுவதை முன்பே அறிந்து மரத்தின் மேல் முட்டையிட்டால் நிச்சயம் மழையை எதிர்பார்க்கலாம்.

தும்பி என்கிற தட்டான் பூச்சி தூரத்தில் பறந்தால் எங்கோ தொலைவில் மழை பொழிகிறது என்றும், தாழ்வான பகுதியில் பறந்தால் அருகில் மழை என்றும் பொருள்.

பறவைகள் இரை உட்கொள்ளும் நேரத்தை தவிர, மற்ற சமயங்களில் வெகு உயரத்தில் பறந்தால் பருவநிலை இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். 

தாழ்வாக பறந்தாலோ அல்லது பறக்கவே இல்லை என்றாலோ மழையோ அல்லது புயலோ வரப்போகிறது என்று அர்த்தம்.

சிட்டுக்குருவிகள் நிலத்தில் விளையாடினால் மழை வரப்போகிறது என்று உணர்ந்து கொள்ளலாம். மைனா, தண்ணீரில் புரண்டு விளையாடினால் மழை நிச்சயம் வந்துவிடும். 

வீட்டில் சில நேரங்களில் எறும்புகள் சாரை சாரையாக உணவை சேகரித்துக்கொண்டு செல்லும். இதுவும் மழை வருவதை உணர்த்தும். 

சுறுசுறுப்பாக இருக்கும் ஈக்கள் அதிகம் பறக்காமல் அருகில் உள்ளவர்களின் மீது மொய்க்கும் என்றால் மழை வரப்போகிறது என்று கூறுவார்கள்.

நிலவு பழுப்பு நிறத்தில் இல்லாமல் பளிச்சென்று இருக்குமானால் மழை வரும். அதே போன்று சில நேரங்களில் நிலவைச் சுற்றி ஒரு வளையம் போல, ஒளிவட்டம் தோன்றும். அது ஓரிரு நாட்களில் மழை வரும் என்பதை உணர்த்தும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் பண்டைய காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் தான் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். இனியேனும் கவனிப்போம்... மழை வரும் செய்தியை நம்மை சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள், மரங்களிடமிருந்து கற்று கொள்வோம்.

சில நேரங்களில் வெயில் அடிக்கும்போதே, மழை பெய்வது ஏன்?

வெயில் அடித்துக் கொண்டிருக்கும். ஆனால், மழை தூறிக் கொண்டிருக்கும். இதை வெயில் மழை என்கிறோம். மேகமே இல்லாமல் இந்த மழை பெய்யும். எங்கோ தூரத்தில் இருக்கும் மேகத்திலிருந்து மழையை காற்று இழுத்து வரும் அல்லது, வெகு உயரத்தில் இருக்கும் மேகத்திலிருந்து மழை பெய்யும். அது பூமியை வந்தடையும்போது மேகம் மறைந்திருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How train and Sun comes at the same time


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->