பெட்ரோல் போட்டே காசெல்லாம் செலவாகுதா.?! சிக்கனப்படுத்த வழிகள் இங்கே.!!  - Seithipunal
Seithipunal


தற்போதைய கால கட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை காரணமாக வாகனத்திற்கு எரிபொருள் செலவு என்பது ஒவ்வொருவருக்கும் சவாலாகத்தான் இருக்கும். எரிபொருள் செலவை குறைக்க என்ன வழி என்று தற்போது பார்ப்போம். 

 * வாகனத்தில் எந்தவிதமான பழுதும் இல்லாமல் கவனித்து வந்தால் 20 சதவீத மைலேஜ் பிரச்சனை தீர்க்கப்படும்.

 * வாகனத்தின் டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தம் இருக்கவேண்டும், காற்றழுத்தம் குறைவாக இருக்கும் பட்சத்தில் எரிபொருள் செலவானது அதிகரிக்கும்.

 * கியர் வாகனங்களில் செல்லும்போது வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப கீரை பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் எரிபொருளின் செலவு அதிகரிக்கும்.

 * இந்திய சாலையை பொருத்தவரை 45 லிருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை இயக்குவதன் மூலம் 40 சதவீத எரிபொருள் சேமிக்க படுகின்றது.

 * வாகன நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளில் அதிக பட்ச கியரில் வாகனம் ஓட்டலாம். மேடு பள்ளமான சாலைகளில் சமமான நிலையில் இருக்கும். தூரம் அதிகம் இருந்தாலும் சமமான சாலையில் ஓட்டும் பட்சத்தில் எரிபொருள் செலவு குறைகின்றது.

 * சிக்னலில் வாகனங்களை அனைத்து வைப்பது மிக நல்லது. சிக்னல் ஸ்டார்ட் ஆவதற்கு மூன்று வினாடிகளுக்கு முன்பு வாகனத்தை இயக்கினால் போதுமானது. குறைந்தபட்சம் 14 விநாடிகள் நிறுத்தப்பட்டு இருந்தால் கூட எரிபொருள் ஆனது சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் 20 சதவீத எரிபொருள் பயன்பாட்டை குறைக்க இயலும்.

 * வண்டியில் பரிந்துரைக்கப்படும் எண்ணிக்கையை விட அதிகமான நபர்களை ஏற்றுவது தவறு. இதன் காரணமாக எரிபொருள் செலவு கூடுகிறது.

 * வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னதாகவே எங்கே செல்ல வேண்டும், எந்த வழியாக செல்ல வேண்டும் என்பது குறித்து கூகுள் மேப்பை பயன்படுத்தியும், பிறரை விசாரித்தும் திட்டமிட்டு பயணத்தைத் துவங்குவது எரிபொருள் செலவை குறைப்பதற்கான மற்றொரு வழியாகும். 

 * வாகனத்தில் சிவப்பு விளக்கு குறிப்பிடும் வேகத்திலேயே பயணிப்பது நல்லது. அதிவிரைவில் செல்வது வாகனங்களின் பகுதிகளை தாக்கக்கூடும்.

 * பெட்ரோல் டேங்கில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டும் எரிபொருளை நிரப்ப வேண்டும். அதிகபட்சமாக நிரப்பும் பட்சத்தில் எரிபொருள் செலவு அதிகரிக்கும். அதுபோல மூடி சரியாக மூடி இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். இல்லை என்றால் எரிபொருள் ஆவியாகிவிடும். 

 * கார்களில் ஏசி வைத்திருப்பதை முடிந்த அளவு தவிர்த்து விடலாம். இதன் காரணமாக எரிபொருள் செலவு அதிகரிக்கும். இதனால் 10 சதவீத எரிபொருளை சேமிக்க முடியும்.

 * இந்த செலவுகளை குறைக்க அலுவலகம் பள்ளி என அன்றாடம் செல்லும் இடங்களுக்கு பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் மட்டும் தனியாக வாகனத்தை பயன்படுத்துவது எரிபொருள் செலவையும் குறைக்கும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to save petrol use


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->