சுவையான கோவில் புளியோதரை... வீட்டிலேயே செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


 புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:

புதிய புலி -50 கிராம் 
பழைய புளி -50 கிராம் 
அரை கப் -வேர்க்கடலை 

அரைக்க: 

மிளகு -ஒரு டேபிள் ஸ்பூன் 
கடுகு ஒரு- டேபிள் ஸ்பூன் 
கருப்பு எள் ஒரு -டேபிள் ஸ்பூன் 
கடலைப்பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன் 
வெந்தயம் -கால் டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு- ஒரு டேபிள் ஸ்பூன் 
காய்ந்த மிளகாய்- 6 

தாளிக்க:

தனியா விதை -ஒரு டேபிள் ஸ்பூன் 
கடுகு -ஒரு டீஸ்பூன் 
நல்லெண்ணெய் -தேவையான அளவு 
உளுத்தம் பருப்பு- ஒரு டீஸ்பூன் 
கடலைப்பருப்பு -ஒரு டீஸ்பூன் 
வெந்தயம் -கால் டீஸ்பூன் 
கருவேப்பிலை -ஒரு கொத்து 
வர மிளகாய் -ஐந்து, 
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் 
தனி மிளகாய் தூள்- ஒரு டீஸ்பூன் 
உப்பு-தேவையான அளவு 

நார்சத்துக்களை உள்ளடக்கிய கடுகு சாதம்.! சுவையாக செய்வது எப்படி?! -  Seithipunal

கோவில் புளியோதரை செய்முறை:

சம அளவு பழைய, புதிய புளியை எடுத்து தண்ணீரில் அலசி சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அரைக்க தேவையான பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொண்டு அனைத்தையும் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். 

பின் வானலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, மஞ்சள், தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். 

அதன்பின் வர மிளகாய் சேர்த்துக் கொண்டு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தனி மிளகாய் தூள் சிறிது சேர்த்து கொதிக்க விட வேண்டும். பாதி பாதி அளவிற்கு கொதித்து கெட்டியானவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை பாதி சேர்த்து கிளறவும். 

அதன் பின் புளி கெட்டியாகி எண்ணெய் மேலே வந்தவுடன் பச்சை கருவேப்பிலையை போட்டு கலந்து கொள்ள வேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் தோல் உரித்த வேர்க்கடலைகள் அரை கப் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளலாம். 

உதிரி உதிரியான சாதத்துடன் அந்த வேர்க்கடலையை சேர்த்து, தேவையான அளவு புளி குழம்பையும் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் பொடியில் இரண்டு ஸ்பூன் போட்டு கலந்து பிரட்டி எடுத்தால் சூப்பரான கோவில் புளி சாதம் ரெடி.! 

செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்கு என கமெண்ட் செய்யுங்கள்.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare temple poliyodharai in home


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->