சர்க்கரை வியாதிக்கு தீர்வு இது தான்!! அவஸ்தை இல்லாமல் ஆரோக்கியமாக வாழ..! - Seithipunal
Seithipunal


சர்க்கரை வியாதி காரணமாக பலர் தனக்கு பிடித்தமாதிரியான உணவுகளை உட்கொள்ள முடிவதில்லை. அவர்களுக்கு, இந்த கேழ்வரகு அடை உடலிற்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும், சுவையான உணவாகவும் அமையும். எப்படி செய்வது என பார்க்கலாம். 

அடை செய்ய தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - அரை கப்,
கோதுமை மாவு - 1 கப்,
கடலை எண்ணெய்,
வெங்காயம் - 3,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு.

அடை செய்யும் முறை :

வீணாகாயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும், பச்சைமிளகாயை நீளமாக வகுத்து கொள்ளவும், ஏனென்றால் அடையை உண்ணும் பொழுது, தனியாக எடுத்து வைத்து விடலாம், பொடியாக நறுக்கினால் இருப்பது தெரியாமல் சாப்பிட்டுவிட்டு அவதிப்பட தேவையில்லை.

கறிவேப்பிலையை கிள்ளி தனியாக வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில், கேழ்வரகு, கோதுமை மாவு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து அடைமாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை வைத்து சூடாக்கி கடலை எண்ணெய் விட்டு மாவை சிறு சிறு அடைகளாக ஊற்றி மேலே சிறிது கடலை எண்ணெய் ஊற்றி, இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்து பரிமாறவும். 

சுவையான, சத்தான கோதுமை கேழ்வரகு அடை தயார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare kezhvaraku adai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->