குட்டீஸ்களுக்கு பிடித்த இறால் முட்டை சாதம்!! செய்வது எப்படி?  - Seithipunal
Seithipunal


பொதுவாகவே இறால் என்றால் குழந்தைகள் விரும்பி உண்பது வழக்கம். அதே போலவே முட்டையும் அவர்களுக்கு பிடித்தமான ஒன்று. இந்த டிஷ் நிச்சயம் அவர்களின் பேவரைட் டிஷாக இருக்கும் முயற்சித்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

முட்டை  - 3
இறால் - 300 கிராம்
சாதம் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின்னர் உதிரி உதிரியாக வேக வைத்த சாதத்தை லேசாக ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி மற்றும் பழை மிளகாயை பொடி,பொடியாக நறுக்கி எடுத்து  கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இறாலை போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். 

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, வதக்கி, இறாலயும் சேர்த்து நன்றாக வதக்கவும். 

பின் கரம் மசாலாத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தீயைக் குறைத்து 10 நிமிடம் இறாலை வேக விடவும். 

வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும். பின்னர் அதில் ஆறவைத்துள்ள சாதத்தை எடுத்து கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

English Summary

how to prepare iral muttai rice


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal