சுவையான மற்றும் சத்தான., குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குதிரைவாலி பொங்கல் இல்லத்திலேயே செய்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நவநாகரீக காலகட்டத்தில் வாழ்ந்து வரும் நாம் நமது உடலுக்கு தேவையான பல வகையான சத்தான உணவு பொருட்களை சாப்பிட மறுக்கிறோம். இதன் காரணமாக நமது உடலின் சத்துக்களானது குறைந்து., அதனால் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு நாம் ஆளாகிறோம். 

அதனை போன்று நமது இல்லத்தில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவுகளை சமைத்து வழங்கினால் அவர்கள் சத்தான உணவு வகைகளின் மீது இனம்புரியாத எதிர்ப்பை காட்டுவார்கள். இவர்களுக்கு விதவிதமான சத்தான உணவுகளை அவ்வப்போது சமைத்து வழங்குவதன் மூலமாக அதன் சுவைக்கு அடிமையாகும் குழந்தைகள் சத்தான உணவுகளை எந்த விதமான தடையும் இன்றி விரும்பி சாப்பிடுவார்கள். 

குதிரைவாலி பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள்:

குதிரைவாலி அரிசி - 1 கிண்ணம்.,
பாசிப்பருப்பு - ¼ கிண்ணம்.,
தண்ணீர் - 2½ கிண்ணம்., 
உப்பு - தேவையான அளவு., 
இஞ்சி - சிறிதளவு.,
பச்சைமிளகாய் - 3 எண்ணம் (Nos).,
சீரகம் - 1 தே.கரண்டி.,
மிளகு - 1 தே.கரண்டி.,
கறிவேப்பிலை - சிறிதளவு.,
எண்ணெய் மற்றும் நெய் - ஒரு தே.கரண்டி.,
முந்திரிப்பருப்பு - சிறிதளவு.... 

குதிரைவாலி பொங்கல் செய்முறை:

எடுத்துக்கொண்ட பாசிப்பருப்பை வானெலியில் போட்டு வறுத்தெடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். 

பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சுமார் ஒரு தே.கரண்டி அளவு நெய்யை சேர்த்து குதிரைவாலி அரிசி., பாசிபருப்பு சேர்த்து நன்றாக வேக வைத்த பின்னர் உப்பை சேர்த்து நன்றாக வெந்தவுடன் இறக்கி விடவும். 

பின்னர் மற்றொரு பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய்யை ஊற்றி சீரகம்., மிளகு., இஞ்சி., கறிவேப்பில்லை., முந்திரி., பச்சைமிளகாயை சேர்த்து நன்றாக தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான மற்றும் சத்தான குதிரை வாலி பொங்கல் சுடசுட தயார்.... 

English Summary

how to make kuthirai vali pongal in home


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal