வெயிலின் தாக்கத்தால் பாழாகும் உதடுகளின் அழகுகளை எளிமையாக பராமரிப்பது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பதில் உதடுகளை மட்டும் விட்டுவிட இயலாது. உதடுகளின் அசைவுகளை வைத்து பெரும் ரசிகர்களை தங்களின் வசம் இழுத்த நடிகைகள் அனைவரும் அறிவோம். அந்த உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் பட்சத்தில் அழகிய தோற்றத்துடன் ஜொலிக்கலாம். 

உதடுகளில் வெண்ணையை அடிக்கடி பூசுவதன் மூலமாக உதடுகள் மென்மையாக மாறும். சுத்தமான சந்தனத்தில் பன்னீரை சேர்த்து உதடுகளில் பூசி., நன்கு உலர்ந்தபின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வர உதடுகள் மென்மையாகி பொலிவு பெரும். 

ரோஜாவின் இதழ்களை பாலுடன் சேர்த்தரைத்து உதடுகளில் தினமும் பூசி வந்தால்., உதடுகளில் உள்ள வெடிப்புகள் மறைந்து பொலிவு பெரும் அல்லது பாலில் உள்ள ஆடைகளின் மூலமாகவும் உதடுகள் வெடிப்பு மறையும்.  

தேங்காய் எண்ணையுடன் வெண்ணையை சேர்த்து உதடுகளில் பூசி வர உதடுகள் வறட்சியில் சிக்காமல் பொலிவுடன் இருக்கும். 

பீட்ரூட்டை சிறுதுண்டாக நறுக்கி உதட்டில் பூசுவதன் மூலமாக சிவப்பு நிறத்துடன் உதடானது காட்சியளிக்கும். உதடுகளை அழகாக்குவதக்காக தேவையற்ற இராசாயன தயாரிப்புகளை உதடுகளில் பூசுவது அதனை பூசிக்கொண்டு இருந்தால்தான் அழகாக காட்சியளிக்கும். இந்த இயற்கை முறைகள் அனைத்தும் நிரந்தரமானவை ஆகும்.

இவையனைத்தையும் ஆண்களும் முயற்சி செய்யலாம்., ஏனெனில் சூடான அல்லது வெயிலின் தாக்கத்தில் பணியாற்றும் நபர்களின் உதடுகள் வெடிப்புடனும்., பார்ப்பதற்கு கருப்பாகவும் இருக்கும். இதனை முயற்சிக்கும் பட்சத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to maintain lips from summer season problems


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!




கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!




Seithipunal