உங்கள் ஆயுளை அதிகரிக்க செய்யும் விஷயங்கள்.! பழக்கப்படுத்தி கொள்ளலாம் வாங்க..! - Seithipunal
Seithipunal


சில அவசியமான வாழ்க்கை பழக்க முறைகள்:

தினமும் தூங்கப்போகும் நேரம் ஒரே நேரமாக இருக்கட்டும். இரவு 9 மணியோ (அ) 10 மணியோ தினமும் அதே நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும்.

தினமும் காலை 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும்.

காபி, புகையிலை, டீ, மது இவற்றினை அடியோடு தவிர்த்துவிட வேண்டும்.

காலையில் உடற்பயிற்சி செய்வது முதல்வேலையாக இருக்கட்டும்.

மாலையில் யோகா செய்யுங்கள். இதனை காலையிலும் செய்யலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். 

உங்கள் படிப்பு (அ) வேலைக்கு அவசியமான ஒன்றினை தினமும் கற்றுக்கொள்வது நல்லது ஆகும்.

எந்த இடத்திலும் முதலில் காதுகொடுத்து கேட்க வேண்டும்.

உங்கள் நேரம், பணம் இரண்டும் உங்கள் வாழ்வின் சக்தி. அதனை எக்காரணம் கொண்டும் வீணடிக்க வேண்டாம்.

எப்பொழுதும் சுகாதாரமாக இருங்கள்.

தினமும் காலையில் ஒருமுறை உங்கள் குறிக்கோளினை ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள்.

புன்னகை செய்யுங்கள். பார்த்தாலே சண்டைபோடுபவர் போல இருப்பது உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதல்ல.

நல்ல காலை உணவு நல்ல நாளின் ஆரம்பம். பழம், ஓட்ஸ் போன்றவை உங்கள் காலை உணவினை சத்துள்ளதாக்கும்.

தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை கலந்து குடிக்கும் நீராக பருகுங்கள். வைட்டமின் சி சத்து கிடைக்கும், சக்தி கூடும். உடலின் வீக்கங்கள் குறையும்.

உடற்பயிற்சி என்பதனை அன்றாடம் 20 நிமிடமாவது செய்யுங்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.

நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும்.

தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்தினை எடுத்துக்கொள்ளுங்கள்.

பட்ஜெட் அவசியம். சேமிப்பு சிறிதளவாயினும் அவசியம்.

ஏதாவது ஒன்றினை தினமும் கற்றுக் கொள்ளுங்கள். மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.

பயம் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும், நம்மையும் உயிரோடு கொல்கின்றது. முதலில் பயத்தினை உடைத்தெரியும் வழியினைப் பாருங்கள்.

ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். 

ஏதாவது ஒரு நல்ல புத்தகம் படிப்பதினை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

எட்டு மணிநேரம் தூங்குங்கள்.

தவறான பழக்கவழக்கங்களை விட்டுவிடுங்கள். எதையும் எண்ணி வருந்தி மூழ்காதீர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to increase your lifetime


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->