இல்லறத்தில் நல்லறம் புகுத்த இதோ உங்களுக்கான எளிய குறிப்புக்கள்.!!  - Seithipunal
Seithipunal


வீடுகளில் இருக்கும் வெள்ளி ஆபரணங்களின் மீது கற்பூரத்தை வைத்து வந்தால் ஆபரணங்கள் கருப்பாகும் நிலையை தடுக்க இயலும். 

வீடுகளில் அதிகளவு எறும்புத் தொல்லையால் அவதியுற நேர்ந்தால்., சிறிதளவு பெருங்காயத்தை தூவி வர எறும்புத் தொல்லையில் இருந்து எளிதில் விடுபடலாம். 

அதிகளவு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில்., சிறிதளவு நீரில் உப்பு சேர்த்து இல்லத்தின் நான்கு பக்கத்திலும் தெளித்தால் எலும்புகளின் நடமாட்டமானது முற்றிலும் குறைந்துவிடும். 

வீட்டில் இருக்கும் குத்து விளக்கு மற்றும் காமாட்சி அம்மாள் விளக்கின் மேல் நுனியில் வைக்கும் பூவானது அடிக்கடி கீழே விழலாம். இவ்வாறு பூ விழாமல் இருப்பதற்கு இரப்பர் பேண்டை சுற்றி வைக்க வேண்டும். 

துணிகளில் இருக்கும் எண்ணெய் கறை மற்றும் கிரீஸ் கறைகள் எளிதில் துணிகளை விட்டு நீங்குவதற்கு., துணி துவைக்கும் சமயத்தில் நீலகிரி தலைலைத்தை அந்த கறைகளின் மீது விட்டு கழுவ., எளிதில் அந்த கறைகளானது நீங்கிவிடும். 

எவர்சில்வர் பாத்திரங்கள் நாட்கள் செல்ல செல்ல தனது பளபளப்பு தன்மையை குறைத்து கொண்டே செல்லும்., அந்த வகையில்., வாரத்திற்கு ஒரு முறை எவர்சில்வர் பாத்திரங்களின் மீது விபூதியை போட்டு தேய்த்து வந்தால் பாத்திரம் பளப்பாக்கும். 

கோடை காலங்களில் உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும்., இந்த சமயத்தில் எண்ணெய் வகையினால் ஆன உணவு பொருட்களை சாப்பிட கூடாது. 

இல்லங்களில் இருக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் ஓட்டையாகிவிடும் பட்சத்தில்., பழைய பல்துலக்கும் பிரஷை உருக்கி அந்த பிளாஸ்டிக் பாத்திரத்தின் மீது ஊற்றி ஒட்டவைத்துவிடலாம். 

அன்றாடம் அல்லது நாள் பட்ட ஷூக்களில் பூண்டை வைத்தால் அதில் நமக்கு தீமை விளைவிக்கும் பூச்சிகள் ஏதும் அண்டாது. 

தினமும் குளிக்கும் போது உபயோகம் செய்யப்படும் ஷாம்புகளை தீர்ந்தவுடன் கீழே போடாமல்., துணிகளை ஊற வைக்கும் போது அதில் போட்டு ஊற வைத்தால் துணி வாசனையுடன் இருக்கும். 

English Summary

how to improve our home


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal