எவ்வளவு கஷ்ட்டப்பட்டாலும் குழந்தை சாப்பிடவில்லையா.? இதோ சூப்பர் வழிகள்.!  - Seithipunal
Seithipunal


எவ்வளவு பெரிய மாஸ்டர் மதராக இருந்தாலும் கூட குழந்தையை சாப்பிட வைக்கும் விஷயத்தில் அனைத்து அம்மாக்களும் தோற்று தான் போகிறார்கள். அப்படி குழந்தைகளுக்கு எப்படி எல்லாம் பசியை உண்டாக்கி உணவு ஊட்டலாம் என்பதற்கான குறிப்புகளை இங்கே வழங்கியுள்ளோம். 

குழந்தைகளுக்கு நேரா நேரத்திற்கு உணவு கொடுக்க வேண்டும். நாம் வேலைகளை முடித்துவிட்டு ஃப்ரீயாக இருக்கும் போது மட்டும் உணவுகளை கொடுக்க முயற்சிக்கக் கூடாது. தினமும் மூன்று வேளை உணவு நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் சரியாக தினமும் உணவுகளை கொடுக்க பழகினால், குழந்தைகளுக்கு ஒரு சில நாட்களுக்குப் பின் அந்த நேரத்தில் சரியாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உதிக்கும். இதனால் அவர்களை சாப்பிட வைப்பது பெரும் சிரமமாக இருக்காது. 

குழந்தைகள் சாப்பிடும் போது உணவு பற்றிய கதைகள் அல்லது சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பேசலாம். தெரியாது என்பவர்களுக்கு இப்பொழுதெல்லாம் youtube-ல் நிறைய, நிறைய கதைகள் இருக்கின்றன. குழந்தை உறங்கும் போது அந்த கதைகளை கேட்டுக்கொண்டே உங்கள் வேலைகளை செய்துவிடலாம். 

பின் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது நீங்கள் கேட்ட கதைகளை அவர்களுக்கு சொன்னால் சுவாரஸ்யமாக சாப்பிட ஆரம்பிப்பார்கள். குழந்தைகளுக்கு பிடிக்காத உணவுகளை திணித்து கோபப்படுத்தக் கூடாது. அப்படி கோபப்பட்டால் அவர்கள் அதன் பின் சாப்பிட நிறைய பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க வெளியில் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்களிடம் எந்தெந்த பழங்கள் எப்படிப்பட்டவை, என்ன சத்துக்கள் இருக்கிறது என்பது குறித்து கூறி அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டுங்கள். 

அவர்களுக்கு பிடித்த மாதிரியான உணவுகளை அழகாக வித்தியாசமாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உணவு உண்ணும் பொழுது குழந்தைகளை செல்போன் பார்த்துக்கொண்டு சாப்பிட வைக்க கூடாது. உணவில் கவனம் செலுத்தி ருசித்து சாப்பிட வைக்க வேண்டும். 

தொலைக்காட்சிகளை பார்த்துக்கொண்டு சாப்பாடு ஊட்டுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு இனிப்பு உள்ள உணவுகள் மிகவும் பிடிக்கும். எனவே, இனிப்பு உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட வைக்கலாம். இது போன்ற வழிகளை கையாண்டால் குழந்தைகளை எளிமையாக சாப்பிட வைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to feed baby food easy way tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->