சுவையான முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணியை வீட்டிலேயே செய்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணியை சீரக சம்பா அரிசியில் செய்தால் தான் சுவை அதிகம். இதற்கு அரிசியை விட மட்டன் கூடுதலாக இருக்க வேண்டும்.

தம் போட்டு விறகு அடுப்பில் செய்வது மிக அதிக சுவை கொடுக்கும். முடியாதவர்கள் ஓபன் பான் முறையில் தம் போட்டு செய்யவும்.

முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்:

மட்டன் - ஒன்னரை கிலோ (எலும்புடன் இருக்க வேண்டும். கொழுப்பு தனியாக இருநூறு கிராம் தனியாக வாங்கவும்).,
சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ.,
வெங்காயம் - அரை கிலோ நீள வாக்கில் மெலிதாக அறியவும்.,
தக்காளி நன்கு பழுத்தது - 350 கிராம் (மெலிதாக நறுக்கவும்).,
இஞ்சி - நூறு கிராம்.,
பூண்டு - 150 கிராம்.,


பச்சை மிளகாய் - பத்து.,
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லி - ஒரு கட்டு
பட்டை., லவங்கம்., ஏலம்., மராட்டி மொக்கு., அண்ணாச்சி பூ., சோம்பு., பிரிஞ்சி இலை - தாளிக்க தேவையான அளவு.,
தனி மிளகாய் தூள் - ஒன்றில் இருந்து இரண்டு ஸ்பூன் உங்கள் காரத்திற்கு ஏற்ப.,
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்.,


தயிர் - இருநூறு கிராம் (புளிக்காத கெட்டி தயிர்).,
டால்டா - நூறு கிராம்.,
நெய் - நூறு கிராம்.,
கடலை எண்ணெய் - தேவைக்கு ஏற்ப.,
உப்பு - தேவைக்கு ஏற்ப.,

முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி செய்முறை:

அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை மிளகாயை அம்மியில் வைத்து அல்லது உரலில் இட்டு இடித்து வைக்கவும். விழுதாக அரைக்கக் கூடாது. முக்கால் பாகம் இடிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.

ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது குக்கர் அடுப்பில் வைத்து டால்டா, நெய், மற்றும் எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் இடித்து வைத்த இஞ்சி பூண்டு கலவை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பின்னர் இதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பாதி புதினா மற்றும் கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.

பின்னர் இதில் கழுவிய மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், மற்றும் தயிர் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும். பின்னர் பாதி உப்பு போடவும்.

இதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடி போட்டு நாற்பது நிமிடம் வேகவிடவும். குக்கராக இருந்தால் மட்டன் தன்மைக்கு ஏற்ப விசில் விட்டு வேக வைக்கவும்.

மட்டன் நன்கு வெந்ததும் இதில் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் (ஒரு கப் அரிசிக்கு ஒன்னரை கப் தண்ணீர்) தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து மீதம் உள்ள உப்பு போடவும்.

அரிசியை அதிக வெப்பத்தில் ஐந்து நிமிடம் வைத்து கொதித்ததும் மிதமான வெப்பத்தில் ஐந்து நிமிடம் வேக விடவும். இப்போது உப்பு, காரம் சரிபார்க்கவும். ஏதாவது குறைந்தால் அட்ஜஸ்ட் செய்யவும்.

இதில் மீதம் உள்ள புதினா, கொத்தமல்லி மேலே தூவவும். பின்னர் நெருப்பை சிம் ஆக்கி விட்டு மேலே ஒரு தட்டு போட்டு அதன் மேல் ஏதாவது வெயிட் வைக்கவும். இதே போல் பதினைந்து நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.

குக்கரில் செய்பவர்கள் விசில் மிதமான வெப்பத்தில் ஒரு விசில் அல்லது பத்து நிமிடம் வைத்து ஆப் செய்யவும். இப்போது இருபது நிமிடம் அப்படியே விட்டு விட்டு பின்னர் தம்மை ஓபன் செய்து மேலாக நெய் விட்டு பக்கவாட்டில் இருந்து கலக்கி விடவும்.

சுவையான முனியாண்டி விலாஸ் பிரியாணி ரெடி.

குறிப்பு:

இந்த பிரியாணி சிறிது குழைவாக இருந்தால் தான் சுவை அதிகமாம். அதனால் இவர்கள் டம் அதிக நேரம் விடுவார்கள் எனக் கூறினார். டால்டா பிரியானிக்கு தனி சுவையைக் கொடுக்கும் என்றும் டால்டா வேண்டாம் என்பவர் நெய் சேர்த்துக் கொள்ளவும்

எப்போதும் அரிசியை விட கறி இதற்கு அதிகமாக வேண்டும். மற்றும் கொழுப்பு கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அதுதான் பிரியானிக்கு சுவையைக் கொடுக்கிறது. இந்த பிரியாணி காரமாக இருப்பது தான் இதன் தனி சிறப்பு. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். நான் புதன் அன்று தான் செய்யப் போகிறேன்.

                                                                                                நன்றிவிஜயபிரியா விஜிகிட்சன்   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to cook Madurai famous muniyaandi villas hotel mutton briyani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->