மின்மினிப் பூச்சிகள் ஏன் மின்னுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


மின்மினிப் பூச்சிகள் ஒளி உமிழ்வதை கண்டிருப்பீர்கள். அவை எவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்?

மின்மினிப் பூச்சிகளின் உடலில் ஒரு வேதிவினை உருவாக்குகின்றன. இதன் காரணமாக அவற்றின் உடலிலிருந்து ஒளி வெளிப்படுகிறது. 

லூசிஃபெரின் எனப்படும் கரிம மூலக்கூறுகளானவை, லூசிஃபெரேஸ் எனப்படுகின்ற வினையூக்கிகளால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஒளிரக்கூடியது. 

மின்மினியின் உடலில் இருக்கும் லூசிஃபெரேஸ் என்கிற ஒளி உமிழும் நொதிப் பொருளின் முன்னிலையில் லூசிஃபெரின் மற்றும் கால்சியம், அடினோசைன், ட்ரை பாஸ்பேட் ஆகியவை ஆக்ஸிஜனுடன் இணைந்து வினைபுரியும்போது ஒளி உருவாகின்றது. 

மேலும், ஒளி உருவாகத் தேவையான வேதிப் பொருட்களுடன் ஆக்ஸிஜனைச் சேர்ப்பதன் மூலமாக மின்மினிப் பூச்சியானது, வேதி வினையின் தொடக்கம் மற்றும் முடிவைக் கட்டுப்படுத்துகின்றது. இது பூச்சியின் ஒளி உறுப்பில் நிகழ்கின்றது. ஆக்ஸிஜன் இருக்கும் போது ஒளி வெளிப்படுகின்றது. அது இல்லாதபோது வெளிச்சமானது மறைந்துவிடும்

மின்மினிப்பூச்சிகளுக்கு நுரையீரல் என்ற ஒன்று கிடையாது. அவை, உடலின் வெளிப் பகுதியில் இருந்து உட்புறச் செல்களுக்கு ட்ராக்கியோல்கள் எனப்படும் ஒருவிதமான தொடர் குழாய்கள் மூலம், ஆக்ஸிஜனை எடுத்து கொள்கின்றன.

மின்குமிழ்கள் ஒளிரும் பொழுது அதிக அளவிலான வெப்பம் வெளிப்படுகின்றது. இருப்பினும், மின்மினியின் ஒளியானது குளிர்ந்த ஒளி. இதன் ஒளியிலிருந்து வெப்ப வடிவில் ஆற்றல் வீணாகுவதில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Bling lightsBeats 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->