வீட்டிலிருந்து வெளியே செல்லும்முன் இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள்..!! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு நாளும் பெண்களது வேலையானது கடினமாகி கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, காலையில் அவசர அவசரமாக எழுந்து உணவை செய்து விட்டு, அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, வீட்டை விட்டு கிளம்பி போன பிறகு தான் யோசிப்போம். வீட்டை பூட்டிவிட்டோமா? என்ற கேள்வி எழும். அது மெல்ல பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் வீட்டிலிருந்து புறப்படும் முன் சிலவற்றை மறக்காமல் செய்யப் பழகலாம். அவ்வாறு செய்ய வேண்டியவை !!

தண்ணீர் குழாய் :

கழிவறை, சமையலறை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தண்ணீர் குழாய்களில் நீர் சொட்டாமல் மூடப்பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். ஏனெனில் ஒவ்வொரு சொட்டாக சொட்டி நிறைய தண்ணீர் செலவடைய கூடும். எனவே வீட்டிலிருந்து கிளம்பும் போது குழாய்கள் மூடப்பட்டிருக்கிறதா? என்று கவனித்துக் கொள்ளுங்கள்.

கேஸில் கவனம் :

சிலிண்டரிலிருந்து கேஸ் அடுப்புக்குச் செல்லும் ரெகுலேட்டரை ஆஃப் பண்ண வேண்டும். சமையல் வேலைகள் முடிந்ததும் மறக்காமல் ரெகுலேட்டரை ஆஃப் செய்துவிடுங்கள். ஒருவேளை அப்படியே செய்தாலும் வீட்டிலிருந்து புறப்படும் முன் அவசியம் அதை கவனிக்க தவறாதீர்கள்.

மூடி முக்கியம் :

சமையல் செய்யும்போது சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பாத்திரங்களை அவசரத்தில் மூடாமல் மறந்திருப்பீர்கள். அதனால் சமையல் முடிந்த பிறகோ, வீட்டிலிருந்து புறப்படும் முன்போ மறக்காமல் பார்க்க வேண்டும். இல்லையெனில் எறும்பு, பூச்சிகள் புகுந்து பொருட்கள் கெட்டுவிடும்.

ஸ்விட்ச் :

அயர்ன் பண்ணும்போதோ, மிக்ஸியில், கிரைண்டரில் அரைக்கும்போதோ, மின்சாரம் போயிருக்கும். ஏதோ நினைவில் ஸ்விட்சை ஆஃப் பண்ண மறந்திருப்பீர்கள். வீட்டிலிருந்து புறப்படும் வரை மின்சாரம் வந்திருக்காது. அதனால் அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள். அதனால் புறப்படும் முன் ஸ்விட்ச் போர்டு அனைத்தையும் செக் பண்ண மறக்காதீர்கள்.

கதவுகள் :

ஒவ்வொரு வீட்டில் முன்புற, பின்புற கதவுகள் இருக்கும். வெளியே செல்லும் அவசரத்தில் முன்புற கதவை மட்டும் பூட்டிவிட்டு செல்வோம். பின்புற கதவும் பூட்டப்பட்டிருக்கிறதா? என்று கவனித்து கொள்ளவும். அதேபோல் பீரோவை திறந்திருப்போம். ஏதோ நினைவில் அதை பூட்டாமல் வைத்திருப்போம். அப்படி இருக்க வேண்டாம். பீரோவை திறந்த கையோடு அதை பூட்டிவிடவும். கடைசியாக, வாசல்கதவை பூட்டும்போது, பதற்றத்தில் சரியாக பூட்டாமல் விடுவோர் அதிகம். அதனால், பொறுமையாக வீட்டை பூட்டிவிட்டு செல்லவும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

home tips


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->