ஹெல்மெட் வாங்கப்போறீங்களா? இதையெல்லாம் First தெரிஞ்சுக்கோங்க.! - Seithipunal
Seithipunal


ஹெல்மெட் வாங்கப்போறீங்களா?

காவலரிடம் பைன் கட்ட வேண்டுமே என கடமைக்காக தினமும் ஹெல்மெட் அணிவோர்தான் அதிகம்... ஆனால் உயிரை காக்க ஹெல்மெட் அணிவது மிக அவசியம்... 

டூவீலர்களை ஓட்டும்போது தேவைப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு உபகரணம் ஹெல்மெட்தான். ஹெல்மெட் அணிந்துகொண்டால் மட்டும் போதாது. அது, தலையில் சரியாக பொருந்தி உள்ளதா? என்பதை உறுதிசெய்வது மிக முக்கியம். 

அந்த வகையில் ஹெல்மெட்டின் வகைகள் என்ன? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.

ஹெல்மெட்.. எவ்வாறு தேர்வு செய்வது?

ஹெல்மெட்டின் விலை எவ்வளவு என்பதை மட்டுமே பிரதானமாக யோசிக்காமல், தங்கள் தலைக்கு அது பொருந்துகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். (குறிப்பாக தலையோடு தொடர்பில்லாத அளவுக்குப் பெரிதாக இருப்பதையோ, மிகக் கஷ்டப்பட்டு தலைக்குள் நுழைக்க வேண்டி இருப்பதையோ தேர்வு செய்யக்கூடாது).

ஆண், பெண் ஆகிய இருவருக்குமே பொதுவாக முகத்தை முழுவதும் மூடும் ஹெல்மெட்தான் லாங் டிராவலுக்கு சிறந்தது. ஏனெனில் இதுதான் தலைக்கு முழு பாதுகாப்பு அளிக்கிறது. பூச்சி அடிக்காமல் இருக்க அணியப்படும் பாதி ஹெல்மெட் சிறந்தது அல்ல.

ஹெல்மெட் வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் 'ஐஎஸ்ஐ" முத்திரை இருக்கிறதா?... 'டாட்" மற்றும் 'இசிஇ" தரச்சான்றிதழ் பெற்றதா? என்பதை தான்... பைக் ரேஸர்களும் கூட இந்த தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்களையே பயன்படுத்துகின்றனர்.

ஹெல்மெட்டின் வகைகள் என்ன?

வகை, நிறம், கிராபிக்ஸ், டிசைன் மற்றும் பாதுகாப்பு அளவு என்பதற்கு ஏற்ப, பல்வேறு ஆப்ஷன்களுடன் ஹெல்மெட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆனாலும் புல் பேஸ் , ஓபன் பேஸ் மற்றும் மாடுலர்என ஹெல்மெட்களில் மூன்று முக்கியமான வகைகள்தான் உள்ளன.

புல் பேஸ் ஹெல்மெட்கள் ஒட்டுமொத்த தலையையும் கவர் செய்யும். மற்ற வகைகளுடன் ஒப்பிட்டால், இருப்பதிலேயே புல் பேஸ் ஹெல்மெட்கள்தான் மிகவும் பாதுகாப்பானவை.

ஓபன் பேஸ் ஹெல்மெட்கள் ரைடரின் தலையை மட்டுமே கவர் செய்யும். ரைடரின் முகத்திற்கு எவ்வித பாதுகாப்பையும் வழங்காது. ஆனால், ரைடர்களுக்கு சிறப்பான கூலிங்கை இது வழங்கும். இதர வகை ஹெல்மெட்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான பாதுகாப்பையே வழங்கும்.

மாடுலர் ஹெல்மெட்களில் உள்ள பிளிப் ஆப்ஷன் மூலம், இதனை புல் பேஸ் ஹெல்மெட்டாகவோ அல்லது ஓபன் பேஸ் ஹெல்மெட்டாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

'எப்போதும் தரமான ஹெல்மெட்களை அணிந்துகொண்டு, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதே சிறந்தது"


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

helmet buying instruction


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->