வேகமாக சாப்பிடுகிறீர்களா?... இந்த பிரச்சனையெல்லாம் வரும்.! - Seithipunal
Seithipunal


உணவு என்பது சுவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியதாகும். நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே, அந்த உணவை ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டியது அவசியமாகும். நீங்கள் எந்த உணவை சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.

வீட்டில் பிள்ளைகள் தட்டில் உணவை வைத்துக்கொண்டு வெகுநேரம் உட்கார்ந்திருந்தால், மணிக்கணக்கில் இப்படி தட்டை வெச்சிக்கிட்டே உட்கார்ந்திருந்தா சாப்பிடறது எப்படி உடம்புல ஒட்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள். ஆனால் எது சரி. மெதுவாக சாப்பிடுவதா? வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்திருப்பதா? இதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் :

ஒருவர் வேகமாக உணவை சாப்பிடும்போது, எவ்வளவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்காமல், அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடும். இப்படி அதிகமாக உணவை உட்கொண்டால், அது தேவையில்லாமல் உடல் எடையை அதிகரிக்கும் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

ஒருவர் வேகமாக உணவை விழுங்கினால், இரத்த சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும். இன்சுலின் எதிர்ப்பு இரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு என்னும் சர்க்கரை நோயை உண்டாக்கும்.

இன்சுலின் எதிர்ப்பு வளர்ச்சிதை மாற்ற நோயுடன் தொடர்புடையதாகும். இதனால் சர்க்கரை நோய் மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய் போன்ற பல நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.

வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல கொழுப்பு எனப்படும் ர்னுடு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதனால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health tips 9


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->