இரவு நேரங்களில் இதை மட்டும் சாப்பிடவே கூடாது.. உஷார்.! - Seithipunal
Seithipunal


நிலவை காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டிய காலம் போய், இன்றைக்கு செல்போனை காட்டி, சோறூட்டும் காலமாகிவிட்டது. குழந்தைகளின் நிலைமை இதுவென்றால், செல்போன்களின் துணையோடும், தொலைக்காட்சிகளின் அரவணைப்போடும்தான் பெரும்பாலானோர் இரவு உணவை சாப்பிடுகிறார்கள்.

பகல் நேரத்தில் எப்படி சாப்பிட்டாலும், நாம் செய்யும் வேலைகளால் அவை ஜீரணித்துவிடும். இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவை சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்களை ஆரோக்கியமாக செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இரவில் பால் அருந்துவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதனால், சீரான தூக்கம் பாதிக்கப்படுகிறது.

இரவு நேரத்தில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அதுவும் புரோட்டீன் உணவுகளை உண்பது நல்லது. எனவே பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

இரவு நேரங்களில் இனிப்பான உணவுகளை ஒதுக்க வேண்டும்.

இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம்.

கீரையை இரவு உணவாக எடுத்து கொள்ளக்கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் தேவைக்கு அதிகமான கலோரி கிடைக்கிறது. இதனால், செரிமானக் கோளாறு ஏற்படும்.

இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டீனும், கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதை செரிக்க அதிக நேரம் தேவைப்படும். இதனால், வாயுத்தொல்லை உருவாகும்.

இரவில் நூடூல்ஸ், மேகி போன்ற துரித உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

40 வயதிற்கு மேற்பட்டோர் இரவில் மட்டன் எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பூசணி, புடலை, சுரக்காய், பாகற்காய், கோவைக்காய், தர்பூசணி, சௌசௌ போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை இரவில் சாப்பிடும்போது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வகை உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health tips 10


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->