முன்னோர்களின் உணவுமுறை ரகசியம்!! நீங்களும் ஆரோக்கியமாக வாழணுமா அப்ப இதை செய்யுங்க!! - Seithipunal
Seithipunal


‘‘தமிழ் பண்பாட்டு உணவுமுறை கிடைத்ததை சாப்பிடுகிற வழக்கம் கொண்டதோ, சுவையின் அடிப்படையை மட்டுமே கொண்டதோ அல்ல. ‘காரணம் இல்லாமல் காரியம் இல்லை’ என்பார்கள் பெரியவர்கள். 

அதுபோல், நம்முடைய ஒவ்வொரு உணவுப் பழக்கத்தின் பின்னும் அறிவியல் பூர்வமான பல ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. அனைவரும் அதை தெரிந்துகொள்வதும், மீண்டும் அவற்றைப் பின்பற்றுவதும் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும்.

காலை உணவு கஞ்சி மட்டுமே:

*காலை உணவு கஞ்சி மட்டுமே என்கிற பழமொழி பண்டைய தமிழ்ச்சமூகத்தில் இருந்தது. புன்செய் நிலங்களில் விளையும் தானியங்களான கம்பு, சாமை, கேழ்வரகு போன்றவற்றில் செய்த கஞ்சி, கூழ் போன்றவையே அன்றைய காலை உணவாக இருந்தது. கேழ்வரகில் செய்த பால், கஞ்சி, கூழ் போன்றவை குழந்தைகளுக்கான உணவாகக் கொடுக்கப்பட்டு வந்தது. 

*இதுபோன்ற திரவ உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டாலும், அதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களும், ஆற்றலும் நிறைவாகக் கிடைத்தது. குறைவாக சாப்பிடுவதால் உணவு செரித்தலுக்காக வயிற்றுக்கு அனுப்பப்படும் ரத்த ஓட்டம் குறைவாகச் செல்கிறது. 

*இது கை, கால்கள் போன்ற உடலின் மற்ற உறுப்புகளின் இயக்கத்துக்குத் தேவையான ரத்த ஓட்டம் சீராகச் செல்வதற்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலும் நிறைவாக கிடைக்கிறது.

*தமிழர்கள் பழங்காலத்தில் வரகு, தினை, குதிரை வாலி, சாமை போன்ற சிறு தானியங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கேழ்வரகுக் களி, சோளக்களி, கம்புக்களி, வெந்தயக் களி, உளுந்தங்களி போன்ற களி வகைகளை திட உணவாக எடுத்துக் கொண்டார்கள். 

*மேலும், உடல் இளைப்பதற்கு, குழந்தைப் பேறுக்குப் பின் என்று பலவகையான மருத்துவ குணமுடைய கஞ்சிகளை பயன்படுத்தினார்கள்.   இதுபோன்ற கஞ்சிகளும், களிகளுமே அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும், உடல் வலுவுக்கும் காரணமாக இருந்தது

English Summary

for your healthy life


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal