ஸ்நாக்ஸ் டைம்... வேலை நேரத்தில் இதையெல்லாம் சாப்பிடக்கூடாது..!! - Seithipunal
Seithipunal


நாம் ஒரு உணவையோ அல்லது நொறுக்குத்தீனியையோ சாப்பிடும்போது காலமும், நேரமும் மிகவும் அவசியம். அதேபோல் சாப்பிடும் உணவின் அளவும், அவற்றின் பண்பும் மிகவும் முக்கியமாகும்.

மேலும், வேலை செய்யும் நேரத்தில் சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். ஆனால், இன்றைய காலங்களில் வேலை செய்யும் நேரங்களில் பலர் வேலையை விட நொறுக்கு தீனிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இவ்வாறு நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதால் நம் உடலின் ஆரோக்கியம்தான் பாதிக்கப்படும். நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

சாப்பிடக்கூடாத உணவுகள் : 

வேர்க்கடலை : 

வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை வேலை நேரத்தில் சாப்பிடுவது ஒரு சிலருக்கு மிகவும் பிடிக்கும். வேர்க்கடலை ஒரு சிறந்த உணவுதான். ஆனால், இதனை வேலை நேரத்தில் சாப்பிட்டால் கலோரிகள் அதிகரித்து உடல் பருமன் அதிகரித்துவிடும்.

காபி :

வேலை நேரத்தில் அதிக அளவு காபி குடித்தால் மோசமான பாதிப்பு உண்டாகும். மேலும் செரிமானக்கோளாறு, பசியின்மை, உடல் எடை முதலிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

பிஸ்கட்ஸ் : 

பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால், பிஸ்கட் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், பின் விளைவுகளை ஏற்படுத்தும். மலச்சிக்கல், செரிமானக்கோளாறு, பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சிப்ஸ் : 

சிப்ஸ் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் முழுவதுமாக கெட்டுப்போய்விடும். இவை கொழுப்பை அதிகரித்து, இதய கோளாறு போன்ற நோய்களை உண்டாக்குகிறது. 

பாப்கார்ன் :

வேலை நேரத்தில் பாப்கார்ன் சாப்பிடும் பழக்கம் எல்லோரிடமும் இருக்கும். அவ்வாறு சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

கேக் :

கேக்கில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியுள்ளது. இவற்றை சாப்பிடுவது நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பிறகு பெரிய ஆபத்தை உருவாக்கும். எப்போதாவது கேக்குகளை உண்பதில் தவறில்லை. 

சாக்லேட் :

வேலை செய்யும் நேரத்தில் தூக்கம் வராமல் இருப்பதற்காக பலரும் சாக்லேட்டை சாப்பிடுவார்கள். ஆனால், இவை உடலுக்கு தீங்கு தருபவை ஆகும். குறிப்பாக கலர் கலர் மிட்டாய்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

மில்க்ஷேக்ஸ் : 

வேலை பார்க்கும்போது ஒரு சிலர் கையில் மில்க்ஷேக் வைத்துக்கொண்டே வேலை செய்வார்கள். இந்தப் பழக்கம் உடல்நலத்தை பாதிக்கும். மேலும் கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல் எடை, இதய பாதிப்பு ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வேறென்ன சாப்பிடலாம் : 

பழங்கள், வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை போன்ற பழங்கள் அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும். இவற்றில் நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும் மிகவும் அதிகம்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நிச்சயம் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். அடிக்கடி சிறிய அளவில் தண்ணீர் பருக முயற்சியுங்கள்.

வீட்டில் சமைத்த உணவில் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பல மடங்கு அதிகம் இருக்கிறது. சுவையும் மிகுந்து காணப்படும். நமது விருப்பத்திற்கு ஏற்ற உணவுகளை தினமும் எடுத்து செல்லலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foods not to be eaten at work


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->