குட்டீஸ் ஸ்பெஷல்.. வாயில் வைத்ததும் கரைந்து போகும் ரவா புட்டிங்! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

ரவா - கால் கப்
சர்க்கரை - கால் கப்
நெய் - 2 டேபில் ஸ்பூன் 
பால் - 1 1/2 கப்
முட்டை - 2

செய்முறை:

முதலில் ஒரு கேக் டின் அல்லது டிபன் பாக்ஸில் நெய்யை உள்ளுக்குள் சுற்றிலுமாக தடவி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் சர்க்கரை நன்றாக உருகி பொன்னிறமான நிறம் வந்தப்பின் உடனே அந்த கேக்டின்னில் மாற்றிவிட வேண்டும். சிறிது நேரம் விட்டாலும் கெட்டியாகி விடும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து பால் சேர்த்து கொதித்ததும் நெய் 2 டீஸ்பூன் சேர்த்து சர்க்கரை ரவா சேர்த்து சற்று நேரம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்தப்பின் இந்த ரவை கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்தப்பின் முன்னமே கேரமலைஸ் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  இட்லி தட்டு வைத்து அதன் மேல் இந்தப் கேக் டின்னை வைத்து மூடியப்பின் இட்லி பாத்திரத்தை மூடி 20 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். அதன்பின் ஒரு ப்ளேட் டில் அதை திருப்பி போட்டு எடுத்துக்கொண்டால் ரவா புட்டிங் ரெடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exquisite sooji pudding receipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->