அழகை கெடுக்கும் தொப்பையை விரைவில் குறைக்க 3 எளிய வழிகள்..!! - Seithipunal
Seithipunal


டல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி என்பது அத்தியாவசியம். வாக்கிங், ஜாக்கிங் செல்வதே போதுமானது. அதற்கும் மேல் நீங்கள் கட்டுடல் மேனியாக திகழ விரும்பினால் ஜிம்மிற்கு செல்வது உகந்தது.

அதிகமான உடல் பருமனுடன் இருப்பவர்கள், வெறும் உடற்பயிற்சி மட்டுமின்றி சீரான முறையில் டயட்டை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.

டயட் என்பது வேறு, பட்டினிக் கிடப்பது என்பது வேறு. சிலர் மிகவும் குறைவான அளவு உணவு உட்கொள்வதை தான் டயட் என்று தவறாக புரிந்து வைத்துள்ளனர்.

உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க சில சிறப்பு பானம் இருக்கின்றன.

இஞ்சி டீ :

நமது உடலில் இருக்கும் வாதம், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வளிக்கிறது. மேலும், குடலியக்கம் மற்றும் செரிமான செயல் திறனை ஊக்குவித்து உடல் எடையை குறைக்க நல்ல முறையில் பயனளிக்கிறது இஞ்சி டீ.

நெல்லிக்காய் ஜூஸ் :

தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதுவொரு வகையான ஆயுர்வேத மருத்துவம் ஆகும். நெல்லிக்காய் ஜூஸ் பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும்.

காய்கறி ஜூஸ் :

காய்கறி ஜூஸ் பருகுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இது உதவுகிறது. மற்றும் உடலுக்கு தேவையான சக்தியும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. இதனால், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை தவிர்க்க முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

easy way to decrease fat in stomach


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->