மேரி பிஸ்கட் வச்சு ஓவனில்லாமல் சூப்பரான ஒரு கேக் செய்யலாம்.! ரெஸிபி இதோ.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

மேரி பிஸ்கட் - 15 
முட்டை - 3
சர்க்கரை - 1/2 கப் 
உப்பு - 1 /4 டீ ஸ்பூன்  
பால் - 250 மிலி 
ஏலக்காய் பவுடர் - 1 /4 டீ ஸ்பூன் 

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் மேரி பிஸ்கட், முட்டை, பால், சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கேக் டின்னில் நெய் சுற்றிலும் தடவி வைத்துக்கொள்ள வேண்டும் .

அதன் பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து கால் கப் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக உருகவைத்து நிறம் நன்றாக மாறியபின் உடனே அந்த கேக் டின்னில் ஊற்றி விட வேண்டும். இது உடனே செய்ய வேண்டும் இல்லையென்றால் பாகு கட்டியாகி விடும்.

அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் பிஸ்கட் கலவையை அதன் மேல் ஊற்றி கொள்ள வேண்டும்.

இட்லி பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்டாண்டை வைத்து  முன்னதாகவே10 நிமிடம் சூடு படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பின் இந்த கேக் டின்னை அதனுள் வைத்து 20 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சுவையான கேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Easy home made cake receipe without oven


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->