வந்தது தீபாவளி... பட்டாசுகளை வெடிக்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்.! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கிவிட்டது. புது ஆடைகள் வாங்குவது, இனிப்பு செய்வதுஃவாங்குவது, பட்டாசு வாங்குவது என கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது.

தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு. பட்டாசுகளை எந்த அளவிற்கு நாம் மகிழ்ச்சியாக வெடிக்கிறோமோ அதே அளவிற்கு நாம் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளை எங்கே வெடிக்க வேண்டும்?

பட்டாசுகளை திறந்தவெளி மைதானங்களில் தான் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் மற்றும் ஒரு பக்கெட் நிறைய மண் இரண்டையும் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தியை உபயோகித்து பக்கவாட்டில் பட்டாசுகளைக் கொளுத்தி வெடிப்பது நல்லது. 

மின் கம்பிகள், குடிசைகள், காகிதக் குப்பைகள், பட்டாசு கடைகள், மண்ணெண்ணெய் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம், காஸ் கிடங்குகள், உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர், மருத்துவமனை, பெட்ரோல் பங்கு, மின்சாரம் டிரான்ஸ்பார்மர், மார்க்கெட் போன்ற பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தரமான பட்டாசு :

தரம் குறைந்த பட்டாசுகள் ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதனால் தரமான பட்டாசுகளையே வாங்க வேண்டும். பட்டாசு வெடிக்கச் செல்லும் முன் காலில் செருப்பு போட்டுக்கொண்டுதான் பட்டாசு வெடிக்கச் செல்ல வேண்டும்.

பட்டாசு கொளுத்தும் முறை :

பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக முதலில் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஆகியவற்றை பட்டாசு பெட்டிகளுக்கு சற்று தொலைவில் தள்ளி வைத்து விடவும். வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.

புத்தாடைகள் பத்திரம் :

பட்டாசு கொளுத்தும்போது காற்றடித்தால் அல்லது மத்தாப்பு தெறித்து ஆடைகளில் தீப்பிடிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. அதனால் நைலான், பட்டுத்துணிகளால் நெய்த ஆடைகள், காற்றில் பறக்கும் ஆடைகள் உடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

தண்ணீரில் கழுவுங்கள் : 

பட்டாசு வெடித்து எதிர்பாராத விதமாக உடலில் தீ பட்டுவிட்டால் அந்த இடத்தில் உப்பு கலந்த நீரைப் பிழிந்தால் தீக்காயத்தினால் உண்டான காயத்தின் வடு உடலில் ஏற்படாது. சுத்தமான துணியைக் கொண்டு காயம்பட்ட இடத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். தீப்புண்ணில் எண்ணெய், ஆயில்மெண்ட், இங்க் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

கண்ணில் காயம்பட்டால் :

பட்டாசின் சிறு துணுக்குகள் கண்களில் படுவதோ, பட்டாசு புகையினால் கண் சிவந்து விடுதல், கண்ணில் நீர் வடிதல், எரிச்சல் போன்றவை ஏற்படலாம். அப்படி இருந்தால் கண் மருத்துவரிடம் உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diwali special 6


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->