பாதத்தில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்பட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா உங்களுக்கு?.!! - Seithipunal
Seithipunal


அந்தக் காலத்தில் வாகனங்கள் இல்லாத சமயத்தில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அனைவரும் நடந்து சென்று வந்தனர். இதனால் அவர்களது உடல் நலம் மற்றும் அழகு பாதுகாக்கபட்டது.  

இன்றளவில் உள்ளவர்கள் எங்கு செல்லவேண்டும் என்றாலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு வாகனங்கள் மூலமாக சென்று வருகின்றனர். அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் பொருட்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டு உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். 

தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை வாரத்தில் ஐந்து நாட்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். 

நடைபயிற்சி செய்வதால் உயர் ரத்த அழுத்தமானது தடுக்கப்பட்டு., உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. 

நடைபயிற்சி செய்வதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் இருக்கிறது. 

நடைபயிற்சி செய்வதால் நமது உடலில் ஏற்படும் மாரடைப்பு., பக்கவாதம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.  

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடையானது சீராக பராமரிக்கபட்டு கொழுப்புகளானது எரிக்கப்பட்டு உடல் நலம் மேம்படுகிறது. 

தினமும் நடப்பதால் கெட்ட கொழுப்புகளை எரித்து., நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது. 

தினமும் நடப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகளவில் உடலுக்கு கிடைக்கிறது. 

தினமும் நடப்பது நமது எலும்புகளுக்கு நல்ல பலமும் வளமும் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலமாக ஆஸ்டியோபோரோசிஸ் என்று அழைக்கப்படும் எலும்பு ஊட்டச்சத்து குறையும் பிரச்சினையானது தடுக்கப்படுகிறது. 

தினமும் நடப்பதால் பாதத்தில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்பட்டு அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daily walking is good for health and body


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->