உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்..! - Seithipunal
Seithipunal


கோடை வந்துவிட்டாலே வெயில் அதிகமாகத்தான் இருக்கும். அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்? எந்த பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது மற்றும் குழந்தைகளுக்கு எப்படி சத்துள்ள பழங்களை தருவது? என்பதை இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம்.

கோடைகாலத்தில் குளிர்பானங்களைக் குடிப்பதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி இவற்றில் கலக்கப்படும் சில வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும்.

எனவே, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குளிர்பானங்களை தவிர்த்து பழச்சாறுகளை அருந்தினால் உடல் சூடு தணியும். ஆரோக்கியம் மேம்படும்.

தினந்தோறும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

வெள்ளரிக்காய் பித்தநீர் மற்றும் சிறுநீரகம், கீழ்வாதம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்கும்.

வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். ஆகவே, இதனை சூப் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் குடல் சுத்தமாய் இருக்கும். நீரிழிவு நோயாளிகளின் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும். கொழுப்பை குறைக்கும். தோல் மற்றும் முடியை பாதுகாக்கிறது.

வெள்ளரிக்காயில் உள்ள சத்துகள் :

புரோட்டின் 

கால்சியம் 

இரும்புசத்து

மெக்னீசியம்

பாஸ்பரஸ்

பொட்டாசியம்

கார்போஹைடிரேட்

சர்க்கரை

நார்ச்சத்து

வெள்ளரிப் பழத்தை கூழாக்கி ஜூஸ் செய்து பருகி வந்தால் கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் சோர்வு, நாவறட்சி, களைப்பு போன்றவை விலகி உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும்.

வெள்ளரிப்பழ ஜுஸ் :

தேவையானப் பொருட்கள் :

வெள்ளரிப்பழம் - 1

ஐஸ் கட்டிகள் - 6

சர்க்கரை - சிறிது

பால் - தேவையான அளவு

செய்முறை :

வெள்ளரிப்பழத்தை தோல் சீவி எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு மிக்ஸியில் சர்க்கரை, வெள்ளரிப்பழம், பால் சேர்த்து அரைக்கவும்.

பின்பு, ஐஸ் கட்டிகளை சேர்த்தால் சுவையான வெள்ளரிப்பழ ஜுஸ் தயார்.

English Summary

cucumber juice


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal