உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறதா?  - Seithipunal
Seithipunal


உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா? சமையலறையில் எந்த ஒரு பொருளையும் நிம்மதியாக வைக்க முடியவில்லையா? உங்கள் வீட்டை குத்தகைக்கு எடுத்து கரப்பான் பூச்சிகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறதா? அதனை வீட்டினுள் நுழைய விடாமல் செய்ய இதோ அருமையான டிப்ஸ்.

கரப்பான் பூச்சிகளை எப்படி விரட்டி அடிப்பது : முட்டை - 3, 100மூ போரிக் அமிலம் - 1/4 கப் சர்க்கரை - 1/2 கப் எடுத்து கொள்ளவும். 
முதலில் முட்டையை நீரில் போட்டு 15 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, அதன் ஓட்டை நீக்கி விட வேண்டும். 

Image result for கரப்பான் பூச்சி SEITHIPUNAL

பின் முட்டையின் வெள்ளைக்கருவையும் அகற்றிவிட்டு, ஒரு கிண்ணத்தில் மஞ்சள் கருவைப் போட்டு, அத்துடன் போரிக் அமிலத்தை ஊற்றி, சர்க்கரை சேர்த்து கரண்டியால் கலந்து, பின் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். 

உருண்டைகளைத் தயாரித்தப் பின், அவைகளை கரப்பான் பூச்சி வரும் அறைகளில் ஆங்காங்கு வைத்து அறைகளை மூடி விட்டு, சிறிது நேரம் கழித்துப் பாருங்கள். கரப்பான் பூச்சிகள் இறந்திருப்பதைக் காணலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cockroach problem in house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->