சூப்பரான.. கேரட் டிலைட் இப்படி ஈசியா செஞ்சு அசத்துங்க.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

கேரட்  - 1/2 கி 
சர்க்கரை - 1/2 கப் 
கார்ன்பிளவர்- 1/4 கப் 
சிகப்பு புட் கலர் - தேவைக்கேற்ப 
துருவிய தேங்காய் - 1 / 2 கப் 


செய்முறை:

முதலில் கேரட்டை தோல் சீவி கழுவியப்பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அதன் பின் நன்றாக மிருதுவாகும் வரை தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். 

அதன் பின் மிக்ஸி ஜாரில் வேகவைத்த கேரட், சர்க்கரை, கார்ன் பிளவர் மாவு, புட் கலர் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக மையாக அரைத்துக்கொள்ளவும்.

அதன் பின் அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அரைத்து வைத்த விழுதை சேர்த்து கை விடாமல் கெட்டியாகும் வரை கிளறி விடவும்.

அதன்பின் கை பொறுக்கும் சூட்டில் உருண்டையாக உருட்டி மெதுவாக விரிசல் விடாமல் நடுவில் அழுத்தி துருவிய தேங்காயில் பிரட்டி எடுத்து கொள்ளவேண்டும்.

மிகவும் சுவையான கேரட் டிலைட் ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Carrot delight recipe In Tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->