இலவம் பஞ்சுமரத்தை வீட்டில் வளர்க்கலாமா.?
can we growth cotton tree in house
இலவம்பஞ்சு மரம் மால்வேசியே குடும்பத்தை சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் செய்பாபெடண்ட்ரா என்பதாகும். தென்அமெரிக்காவின் அமேசான் பகுதியை தாயகமாக கொண்டது.
இலவம்பஞ்சு மரங்களில் நாட்டு இலவு, கல் இலவு, செவ்விலவு என மூன்று ரகங்கள் இருந்தாலும் பெரும்பான்மையாக நாட்டு இலவு, செவ்விலவு ரகங்களே வளர்க்கப்படுகின்றன.
இவ்வகை மரங்களை சில்க் காட்டன், சிங்கப்பூர் கப்பாக், இலவன், ஒலவன், பஞ்சு மரம் என்றும் அழைக்கிறார்கள். அற்புத பஞ்சு மரம் என்றும் அழைக்கப்படுகிறது. பல இடங்களில் எளிதில் வளர்க்க உகந்த ஒன்று தான்.
நீண்ட கால பயிரான இலவம்பஞ்சு மரம் அதன் நுனி முதல் அடி வரை, விதை முதல் மரம் வரை அனைத்துமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இம்மரங்களை வீட்டில் அல்லது தோட்டத்தில் உள்ள சிறிது இடத்தில் வளர்த்தால் போதும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கை மேல் பலன் கிடைக்கும்.
அதிக நிழல் தராத தன்மை உடைய இலவம்பஞ்சு மரம் எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம்.
இதன் பஞ்சிலிருந்து மெத்தை, தலையணைகள் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அதன் விதைகள் எண்ணெய், சோப் தயாரிப்பிலும், அதன் சருகுகள் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எண்ணெய் தயாரிப்புக்கு பின் கிடைக்கும் புண்ணாக்கு கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகிறது. இந்த எண்ணெயை உயவுப் பொருளாக, அதாவது லூப்ரிகேட்டிங் ஆயிலாகவும் பயன்படுத்தலாம்.
குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் கழித்து காய்ப்பு குறைவான சமயத்தில் மரங்களை வெட்டி, பலகை தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையாக தீப்பெட்டி தீக்குச்சிகள் தயாரிக்க இம்மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வாழைமரம் போன்று இலவம்பஞ்சு மரத்தின் அனைத்து பாகங்களுமே விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதாக உள்ளது.
இலவம்பஞ்சு மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?
இலவம்பஞ்சு மரத்தை பொது இடங்கள் அல்லது தோட்டத்தில் வளர்ப்பது சிறப்பு.
English Summary
can we growth cotton tree in house