தென்னங்கள்ளிலிருந்து இருந்து எடுக்கப்படும்  தேங்காய் சர்க்கரையில் இவ்வளவு நன்மைகளா? - Seithipunal
Seithipunal


சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையில் நன்மைகளை விட தீமைகளை அதிகம். இதற்கு மாற்றாக நாம் அனைவரும் கருப்பட்டி மற்றும்  கருப்பட்டியிலிருந்து பெறப்படும்  பழுப்புச் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். தற்போது இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது தென்னங்கள்ளிலிருந்து  தயாரிக்கப்படும் தேங்காய் சர்க்கரை. குறைந்த அளவே கலோரிகளைக் கொண்ட இந்த சர்க்கரையில் நம் உடலுக்கு நன்மை தரும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

தேங்காய் சர்க்கரையில் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நாம் பயன்படுத்தும் சாதாரண வெள்ளை சர்க்கரை ஐந்து கிராம் அளவுக்கு 40 கலோரி உள்ளது. ஆனால் இந்த தேங்காய் சர்க்கரை ஐந்து கிராம் அளவுக்கு  20 முதல் 25 கலோரிகளே உள்ளன. இது உடல் எடையை  குறைக்க முயற்சி செய்பவர்கள் மற்றும் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு  நன்மை பயக்கக்கூடிய ஒன்று.

தேங்காய் சர்க்கரையில் பிரீ பையாட்டிக்  மூலக்கூறுகள் அதிக அளவில் உள்ளன. இதை நம் குடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த மூலக்கூராகும். மேலும் தேங்காய் சர்க்கரையில் காணப்படுகின்ற நார்ச்சத்து நமது செரிமானத்திற்கு அதிக அளவில் உதவி செய்கிறது.

தேங்காய் சர்க்கரையை சைவ பிரியர்கள்  எந்தவித தயக்கமின்றி பயன்படுத்தலாம். ஏனெனில் வெள்ளை சர்க்கரையானது சுத்திகரிக்கப்படும் போது அதில் எலும்பு கரி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தேங்காய் சர்க்கரை 100 சதவீதம்  இயற்கை முறையிலேயே
தயாரிக்கப்படுகிறது.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும்  வெள்ளை சர்க்கரையில் கிளைசெமிக் குறியீடு 60 முதல் 65 சதவீதம் வரை இருக்கும்.ஆனால் இது தேங்காய் சர்க்கரை 35 சதவீதமே உள்ளது. இதனால் தேங்காய் சர்க்கரை நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக பயன்படுத்த முடியும்.

தேங்காய் சர்க்கரை பல்வேறு நன்மைகளைக் கொண்டிருந்தாலும்  இது தற்போது தான் வழக்கத்திற்கு  வந்திருக்கிறது அதனால் இதனை பயன்படுத்தும் முன்னர்  நமது மருத்துவரிடமோ அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களிடமோ ஒருமுறை கலந்தாலோசித்து விட்டு பயன்படுத்துவது சிறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of coconut sugar which extracted from tender coconut toddy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->