கோடைகால முக பாதிப்பை போக்கி, சருமத்தை அழகாக்க எளிமையான டிப்ஸ்!!  - Seithipunal
Seithipunal


சிறிதளவு பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல் அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் முகத்தைக் கழுவி வந்தால் உங்கள் முகம் பட்டுபோன்று மென்மையாக தோற்றமளிக்கும்.

வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.

இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும்.

சிறிதளவு பாசிப் பயிறை எடுத்து தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.

கொத்தமல்லி விதை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்.

துளசி இலை மற்றும் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beauty tips for fresh and cute face


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->